எம் அம்மு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : எம் அம்மு |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 23-May-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 724 |
புள்ளி | : 47 |
🟩🟦🟪🟧🟨🟫🟩🟦🟪🟦🟩
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🟥🟧🟨🟩🟦🟪⬛🟫🟥🟧⬛
கீதையை வைத்திருந்தாலும்
ஞானம் வரவில்லை
புத்தகக்கடைக்கு
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
பூக்கடை
வாடியிருக்கிறது
பூ விற்பவரின் முகம்
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
உழவன் வீட்டில்
பொங்கல் பொங்கியது
உடைந்த கலப்பையில்
◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️
தூணிலும் இருக்கிறது
துரும்பிலும் இருக்கிறது
ஊழல்
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
எதிர் வீட்டில் திருமணம்
உறங்க முடியவில்லை
முதிர்கன்னன்
*கவிதை ரசிகன்*
⬛🟩🟧🟦🟥🟪🟫⬛🟩🟧🟦
சலூன் கடைக்காரர்
கூட்டி பெருக்கி
ஓரம் தள்ளினார்
எல்லா ஜாதி
மயிரையும்
ஆடை, ஆபரணத்தால்
பூட்டி வைத்தனர்
அரை, குறை ஆடை தான்
அழகு என்றனர்
ஒப்பனைக்குள் உன்னை
ஒளித்து வைத்தனர்
பாலியல் பகுப்பால்
பதிக்கி வைத்தனர்
பொய் கதைகள் பலகூறி
புனிதம் என்றனர்
இப்படியே
கதை கூறி
உன் சிந்தனையை
சிதைத்துவிட்டனர்!!!
உண்மை கண்ணாடி
உன் முன்பே...
உலகம் வெல்ல
வா பெண்ணே!!!
புனிதம் இங்கே உடையட்டும் !
புதுமைகள் பலவும் பிறக்கட்டும்!!
சாதிகள் எல்லாம் ஒளியட்டும்!
சமத்துவம் இங்கே பிறக்கட்டும்!
பாரினில் உன் புகழ் மிளிரட்டும்!
பாரதியின் கனவு பலிக்கட்டும்!
வாழிய பெண்மை வாழியவே!!
நின் தேசம் போற்ற !!வாழியவே!!!
சதையாக
அழகாக
வருவது அன்பு அல்ல...
உயிராக
உணர்வாக
வருவது மட்டுமே அன்பு...
இது தான்
உண்மை காதல்..
இது தான்
உண்மை அழகு..
சும்மா என் ஃலைப் நடந்த ஒரு ௧ாமெடியான விஷயத்த இங்௧ ஷேர் பண்றேன்....
அப்ப நான் +1 படிச்சுகிட்டு இருந்தேன். எங்க டவுன்-ல உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரில அறிவியல் கண்காட்சி வச்சுருந்தாங்௧... எல்லா பள்ளி மாணவர்களும்
அதுல கலந்து௧்௧ அழைப்பும் விடுத்திருந்தாங்௧.
எங்க ஸ்கூல்-ல இருந்து யார தேர்ந்தெடுத்து அனுப்பலாம்ங்௧ிற பொறுப்பு எங்க பிஸிக்ஸ் வாத்தியார்ட ஒப்படைக்கப் பட்டுருந்திச்சு.
அவரு +2 பசங்களுக்கு பப்ளிக் எக்ஸாம்கிறதால
+1ல இருந்து பசங்௧ல அனுப்ப முடிவு பண்ணிட்டாரு... நேரா எங்க வகுப்புக்கு வந்தவரு
டாப் 10 ரேங்கர்ஸ்லாம் எந்திருச்சு நில்லுங்க
அப்பிடினாரு..... எந்திருச்சு நின்
சதையாக
அழகாக
வருவது அன்பு அல்ல...
உயிராக
உணர்வாக
வருவது மட்டுமே அன்பு...
இது தான்
உண்மை காதல்..
இது தான்
உண்மை அழகு..
யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!
தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!
தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!
உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!
உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!
சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!
அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!
பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!
வாழ்க ! பெண்மை வாழியவே!
மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை....
திருமணமான புது தம்பதிகளிடம் உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்று மருத்துவர் கூறும்போது ,, பெண் சந்தோசப்படுகிறாள், ஆண் பெருமைப்படுகிறான்..
பெண் மனதில் ஒன்பது மாத காலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்பாள்,,
ஆனால் ஒரு ஆண் மனைவி , குழந்தை இருவரையும் எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்பான்.
பெண் மனதில் பத்து சதவிகித அன்பு இருந்தாலும் அதை நூறு சதவிகிதமாய் வெளிப்படுத்துவாள். ஆனால், ஒரு ஆண் மனதில் நூறு சதவிகித அன்பு இருந்தாலும் அதை பத்து சதவிகிதம் கூட வெளிப்படுத்த தெரியாது,,
ஆண்களுக்கு கோபத்தை
வெள்ளிப்பனியென
விழும் பெரும் துளியென
கண்ணில் திரையென
காற்றின் துணையென
சட சட இசையென
சலனமும் நானென
வானக்கொடையென
வானவர் வரமென
உழவர்தம் உயிரென
உயிர்தரும் உயர்வென
சமத்துவம் பாரென
சமதர்ம வேரென
நீர்க்கணை நானென
நிலம்தொடும் போரென
பொழியுது மழை
பெரும் இறைவனின் கலை!
நீர்த்துளி சேருது
நிலத்தினில் உருது.,
நிலம்தொட்ட நீரதன்
நிறத்தினை மாற்றுது.
நதிகளாய் பிறக்குது
நளினமாய் நெளியுது.
நீர்விழும் அதிசயம்
அருவியாய் ஜொலிக்குது.
தரையினில் வெடிப்புகள்
தழுவலில் குலையுது.
தழும்புகள் மறையுது.
புற்களும் பிழைக்குது
பெரும் சிறு மரங்களும்
தலைக்குது சிலிர்க்குது!.
காய்களும் கனி
பறவைகளின் பிரார்த்தனை..!
சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானால்
—சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
—ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?
பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
—பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
—பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!
அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
—அடைத்து வைக்கும் செயலுக்கெனத் தனிநீதியா.!
அநியாயமாய்க் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
—அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!
கனியைப்பறித்தீர் காடுகளைக் கருணையின்றி அழித்தீர்.!
—கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
—பற்றுக்கொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!
பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
—இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
எம்மைச் சொந்தமாக்கக் கூண்டுக்குள் அடைத்தசெயலை..
—எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!?
யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
—ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்?
பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
—பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!
வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
—வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
அனுதினமும் வருவான் அருமையாய்ப் பேசுவானவன்.!
—அடிமை வாழ்வு கொடிதெனச் சற்றும் உணராதவன்.!
சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
—கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
—இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!
இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
—சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
—குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!இறைவா…
===============================================
வல்லமை மின் இதழ் நடத்திய படக்கவிதை போட்டியில், இன்றுமுதல் சனிக்கிழமை வரை சிறந்த கவிஞரென பாராட்டுபெற்ற கவிதை..
நன்றி பட உதவி:: கூகிள் இமேஜ்
என் நிவாரணம்!இயற்கையின் நிர்வாணம்!
உரசிக் கொண்டு எப்படி
உன்னால் மட்டும்!
எப்படி பார்த்து முடிப்பேன்!
மழை வெயில் குளிர் என்று
அனுபவித்துக் கொண்டே போகி்றாய்!
மீண்டும் மீண்டும் இப்படியே
ரசிக்க வைக்கிறாய்
முகத்தைத் திருப்பாமல்
போதும் !
கட்டியணைத்துக் கொண்டு
பிணமாகி்ட போகிறேன்!
பொறாமை அதிகம்
உன்னை நான் மட்டும் சொந்தம்
வெட்கத்தில்
இலைகளாய் உதிர்வதை நிறுத்து,
மெதுவாக
அசைந்து என் மீது விழும்
ஆகிக் கொண்டே போயிகிறது
யார் உன்னை ரசித்தாலும்
கோபம் வராமல்
அவர்களையும் ரசிக்கத்
தோன்றுகிறது !
உன் மீதான ஒரு தலைக் காதல்
நான் மட்டும் ரசிப்பேன்!
அனுபவிப்பேன்!ஏனென்றால்,
உன் நிர்வாணம் மட்டும்
என் நிவாரணம் !