Saravanan2621 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Saravanan2621 |
இடம் | : |
பிறந்த தேதி | : 26-Jan-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 3 |
என்னவனே..
என் நினைவெல்லாம்
நிறைந்தாயே!
என்னுள்
உயிராக உரைந்தாயே!
முடிவில்
என்னை மறந்துவிடு
என்று கூறி
மறைந்தாயேடா!
நீ கூறி
எதை கேட்கவில்லை
நான்...
இதையும் செய்வேன்
உனக்காக..
என் உயிரெல்லாம்
உருகட்டும் !
ஓசை எல்லாம்
அடங்கட்டும்!
அப்போதும்
முயற்சிப்பேனடா!...
என் மரணப்படுக்கையிலும்
உன்னை மறக்கவே முயற்சிப்பேனடா!!!...
என்
மேல் இமையும்
கீழ் இமையும்
சேருமிடத்தில்..
உன்
நினைவென்னும்
ஊசியால்
குத்தாதே...
என்
உயிர் குடிக்கும்
உன்
நினைவுகளுக்கு
உறவு கொடுப்பாயா..
நீ
தீண்டுவாய் என..
உன்
கால் மிதிபடும்
சருகாகவும்
காதிருப்பேனடா...
சில
நேரங்களில் சிலையாகிப்போகிறேன்..
பல நேரங்களில்
பைத்தியமாகிறேன்..
உன் நினைவாலே..
உன்
நிஜங்களோடு
பேசிக்கொண்டு,
என்
நிழல்களோடு
வாழ்கிறேன்..
உன் நினைவாலே..
கட்டுமானத்தில் கண்டறியமுடியாத காரணமற்ற விசைகளின்,
வலிமையால் வரும் விரிசல்களின் வலிமையயைக்கூட முன்கூட்டியே கண்டறியும் எங்களுக்கு ,
முடியவில்லை விரிசல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ- காரணம்,
விரிசல்களே முழு வாழ்க்கையாக இருப்பதினால்.
விரிசல்கள் அதிவேகத்தின் அடையாளம்,
விரிசல்கள் ஆருயிர்நட்பின் அடையாளம் ,
விரிசல்கள் இளமையின் அடையாளம்,
விரிசல்கள் ஈஈருவரின்-தனிமையின் அடையாளம்,
விரிசல்கள் உறவின் அடையாளம்,
விரிசல்கள் ஊறுதலின் அடையாளம்,
விரிசல்கள் எதிர்பார்ப்பின் அடையாளம்,
விரிசல்கள் ஏமாற்றத்தின் அடையாளம்,
விரிசல்கள் ஐம்புலன்களின் அடையாளம்,
விரிசல்கள் ஒற்றுமையின் அடையாளம்,
வி
தவிக்கின்றேன் உன் நினைவுகளை தவிர்க்க,
தவிர்க்க நினைக்கவில்லை ஒருபோதும் உன்னை,
தவிர்க்க நினைக்கிறாய் இப்பொழுது உன் தோழிகளினால்,
தவிர்த்துவிட்டாய் முந்தைய இரவு உன்னுடன் என்னை உறக்கத்திட்கு கொண்டு செல்ல,
தவிர்க்கமுடியவில்லை என் கோபத்தை- உன் தோழிகளினால் ,
தவிர்க்க தோன்றவில்லை - உன்னைக்கான ,
தவிக்கிறேன் தனியாக - உன்னிடமிருந்து குறுந்செய்தி வராதாஎன்று,
தவிர்க்க துடிக்கிறது நீ இல்லாத ஒரு நொடியும் வேண்டாமென்று,
தவிர்க்க முடியவே முடியாது உன்னை - என்றுமே
என்னை இயக்கும் மூளையிடமிருந்து,
தவிக்கிறேன் என் உயிர் உன்னிடமிருந்து
வேறு யாரிடமும் செல்லக்கூடாதென்று,
சரவணா . மு
என்னை சிறுக சிறுக உடைத்தவளே என் காதலியே,
உன்னை சீரான பச்சை நிற புடவையில் பார்த்தேன்
சிதறிப்போனேன் மனதளவில் பசுமையான சிறு சிறு துண்டுகளாக.
பூரித்துப்போனேன் உன் புன்சிரிப்பினால் ,
கவிழ்ந்துவிட்டேன் உன் கருநீல கண்களால்,
வளைந்துவிட்டேன் உன் நீண்டு வளைந்த புருவத்தினால்,
தவிக்கிறேன் உன் காதில் கம்மளாய் வாழ ,
ஏங்குகிறேன் உன் கழுத்தில் சங்கிலியாய் மாற ,
வளைந்துகொடுக்கிறேன் உன் வளையலாய் வர ,
நெகிழ்கிறேன் உன் நெஞ்சினில் நுழைய,
துடிக்கிறேன் உன் விரலில் மோதிரமாய் நுழைய ,
சிந்திக்கிறேன் உன் கூந்தலில் சிக்கிக்கொள்ள,
நீடிக்கிறேன் என் வாழ்நாளை -மல்லிகை பூவோடு சேர்ந்த உன் கருநீல கூந்தலை ந