விரிசல்கள்

கட்டுமானத்தில் கண்டறியமுடியாத காரணமற்ற விசைகளின்,
வலிமையால் வரும் விரிசல்களின் வலிமையயைக்கூட முன்கூட்டியே கண்டறியும் எங்களுக்கு ,
முடியவில்லை விரிசல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ- காரணம்,
விரிசல்களே முழு வாழ்க்கையாக இருப்பதினால்.

விரிசல்கள் அதிவேகத்தின் அடையாளம்,
விரிசல்கள் ஆருயிர்நட்பின் அடையாளம் ,
விரிசல்கள் இளமையின் அடையாளம்,
விரிசல்கள் ஈஈருவரின்-தனிமையின் அடையாளம்,
விரிசல்கள் உறவின் அடையாளம்,
விரிசல்கள் ஊறுதலின் அடையாளம்,
விரிசல்கள் எதிர்பார்ப்பின் அடையாளம்,
விரிசல்கள் ஏமாற்றத்தின் அடையாளம்,
விரிசல்கள் ஐம்புலன்களின் அடையாளம்,
விரிசல்கள் ஒற்றுமையின் அடையாளம்,
விரிசல்கள் ஓலைச்சுவடியின் அடையாளம்,
விரிசல்கள் அவ்வை -பாட்டின் அடையாளம்,

சரவணா

எழுதியவர் : சரவணா மு (8-Feb-17, 2:30 pm)
சேர்த்தது : Saravanan2621
பார்வை : 108

மேலே