உன்னை மறக்க முயற்சிப்பேனடா

என்னவனே..

என் நினைவெல்லாம்
நிறைந்தாயே!
என்னுள்
உயிராக உரைந்தாயே!

முடிவில்
என்னை மறந்துவிடு
என்று கூறி
மறைந்தாயேடா!

நீ கூறி
எதை கேட்கவில்லை
நான்...

இதையும் செய்வேன்
உனக்காக..

என் உயிரெல்லாம்
உருகட்டும் !
ஓசை எல்லாம்
அடங்கட்டும்!
அப்போதும்
முயற்சிப்பேனடா!...

என் மரணப்படுக்கையிலும்
உன்னை மறக்கவே முயற்சிப்பேனடா!!!...

எழுதியவர் : எம் அம்மு (1-Mar-17, 12:18 pm)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 537

மேலே