ஒரு ஒற்றைக் கண்ணீர்த் துளி
ஒரு முன்பகல் நேரத்தில்
கடற்கரையோரத்தில்..
அலை தீண்டும்
தூரத்தில் அமர்ந்திருக்கையில்
நிகழ்ந்தது உனக்கும்
எனக்குமான கடைசி
சந்திப்பு....
விடை பெறுகிறேன்
என்றாய்..
ஏதேதோ காரணம்
சொன்னாய்...
என் கண்கள்
தூரத்துக்கடலில்
நிலைத்திருக்க, ஆடையில்
படிந்த மணலை உதறி
சென்று விட்டாய்
கூடவே என்னையும்....
எழுந்து அலையோரத்தில்
நடக்கத்துவங்குகிறேன்...
அந்த படகு மறைவு..
உன் முதல் தீண்டல்...
இருவர் கால் நனைத்த
அலைகள்...
உன் துப்பட்டா
நம் நிழற்க்குடை...
கால் புதைந்த
மணல்கள்...
பூ வாங்கச்
சொன்ன பூக்காரம்மா...
உன் கூந்தலில் பூச்சூடி
உலகை வென்றது
போன்ற தருணங்கள்....
திரும்பி கடலை
நோக்கினேன்...
அலையின் சலனங்கள்..
அருகில் போகிறேன்..
வெறித்துப் பார்க்கிறேன்...
ஓ பார்வை
மறைகிறது...
உருண்டு கடலில்
கலந்தது
ஒரு ஒற்றைக்
கண்ணீர்த் துளி.....