உன் நினைவாலே 2

என்
மேல் இமையும்
கீழ் இமையும்
சேருமிடத்தில்..
உன்
நினைவென்னும்
ஊசியால்
குத்தாதே...
என்
உயிர் குடிக்கும்
உன்
நினைவுகளுக்கு
உறவு கொடுப்பாயா..
நீ
தீண்டுவாய் என..
உன்
கால் மிதிபடும்
சருகாகவும்
காதிருப்பேனடா...
சில
நேரங்களில் சிலையாகிப்போகிறேன்..
பல நேரங்களில்
பைத்தியமாகிறேன்..
உன் நினைவாலே..
உன்
நிஜங்களோடு
பேசிக்கொண்டு,
என்
நிழல்களோடு
வாழ்கிறேன்..
உன் நினைவாலே..