தத்தளிக்கும் இதயங்கள் இரண்டு 555

என் காதல்...

காதலெனும் நதியினில் நம்
காதல் ஓடம் கவிழ்ந்திட...

இக்கரையில் நான்
அக்கரையில் நீ...

அக்கறையுடன் நம் காதலை
அங்கீகரிக்க ஆளில்லாமல்...

சாதிமத சங்கதியை
சொல்லி...

நம்மை சதிசெய்து வாழ்க்கை
சங்கிலியில் கட்டி வைத்தனர்...

காலம் கடந்த இடைவெளிக்கு
பிறகு சந்தித்துக்கொண்டோம் நாம்...

ஏனோ உன்னவனும் என்னவளும்
புரிந்து கொண்டார்களோ...

சாதி சங்கிலியால் நாம்
பிரிக்க பட்டத்தை...

காலம் ரொம்பவும் மாறிவிட்டது
என் அன்பே...

நம் சந்திப்பு சில
நினைவுகள்...

வாழ்ந்துதான் பார்ப்போம்
இந்த வாழ்க்கையை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Mar-17, 8:27 pm)
பார்வை : 498

மேலே