காதலின் காதலி

என்னை சிறுக சிறுக உடைத்தவளே என் காதலியே,
உன்னை சீரான பச்சை நிற புடவையில் பார்த்தேன்
சிதறிப்போனேன் மனதளவில் பசுமையான சிறு சிறு துண்டுகளாக.

பூரித்துப்போனேன் உன் புன்சிரிப்பினால் ,
கவிழ்ந்துவிட்டேன் உன் கருநீல கண்களால்,
வளைந்துவிட்டேன் உன் நீண்டு வளைந்த புருவத்தினால்,
தவிக்கிறேன் உன் காதில் கம்மளாய் வாழ ,
ஏங்குகிறேன் உன் கழுத்தில் சங்கிலியாய் மாற ,
வளைந்துகொடுக்கிறேன் உன் வளையலாய் வர ,
நெகிழ்கிறேன் உன் நெஞ்சினில் நுழைய,
துடிக்கிறேன் உன் விரலில் மோதிரமாய் நுழைய ,
சிந்திக்கிறேன் உன் கூந்தலில் சிக்கிக்கொள்ள,
நீடிக்கிறேன் என் வாழ்நாளை -மல்லிகை பூவோடு சேர்ந்த உன் கருநீல கூந்தலை நுகர.


சரவணா.மு

எழுதியவர் : சரவணா (6-Feb-17, 2:06 pm)
சேர்த்தது : Saravanan2621
Tanglish : kathalin kathali
பார்வை : 104

மேலே