கார்குழலி கண்களில் காதல் முகில்பொழிவோ
மாரி பொழியாது மாறிப் பொழிந்திடின்
ஊருக்குக் கேடு உயிர்பயிருக் கும்கேடு
கார்நெல் விதைத்து கதிரறுக்க வேண்டாமோ
கார்குழலி கண்களில் காதல் முகில்பொழிவோ
தேர்போல் அசைந்திளம் தென்றல்போல் செல்பவளே
ஊர்பார்க்க வந்து உனைத்தையில் கைபிடிப்பேன்
ஏர்பிடித்த கையால் எழில்
------பஃறொடை வெண்பா