விதி வலிது

வர வேண்டிய நேரத்த்தில் வரவில்லை
ஆய்ந்து ஓய்ந்து வேளையில் வரும் செல்வம்
எதற்காக என்று நினைக்கும் போது
மனம் வலிந்து உருகுகிறது.

எதுவேமே கிடைக்கும் போது தான் கிடைக்கும்
நம் நேரத்திற்கு வரும் என்று எண்ணுவது
எவ்விதத்தில் இலாபம், அமைதியாக
ஏற்றுக்கொண்டு வாழறேன்

இதைத்தான் விதி என்று சொல்வார்கள்
கால் கை சுகமாக இருக்கும் போது
வந்திருந்தாள் மகிழ்ச்சி கிட்டியிருக்கும்
தற்போது கால் இழுக்க கை வலிக்க

செல்வம் தேடி வருவது எதனால்
புரிந்து கொள்ள இயலவில்லை
சேர்த்துக் கொண்டு சோர்வுடன்
நிற்கிறேன் ஏனோ தெரியவில்லை.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (3-Feb-25, 9:50 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 10

மேலே