மாசு

எனக்கு எதுக்கு அப்பா 'மாசு'ன்னு பேரு வச்சீங்க?

@@@@@@@@

இதை திரைப்படத்தில் அந்த நடிகர் மாசு, இந்த நடிகர் மாசுன்னு


சொல்லறாங்கடா. அந்த மாசு தான் நான் உனக்கு வச்ச பேரு.

@@@@@@@@

பள்ளிக்கூடத்தில் பையன்கள் எல்லாம் என்னை 'தூசு, தூசு'ன்னு

கிண்டல் பண்ணறாங்க அப்பா.

@@@@@@@@@

ஏண்டா சூப்பரு ஸ்டாருங்களுக்கு மாசு இருக்குதுன்னு

சொல்லறாங்க. அவுங்க எல்லாம் தூசு தும்புவோடவா

இருக்கறாங்க. உன்னைக் கிண்டல் பண்ணறவங்க முட்டாள்

பசங்கடா.

@@@@@@@@@@

இல்லப்பா அதிக மக்களால் பாராட்டபடறவங்களை "அவரு

(Mass) மாஸ்"ன்னு சொல்லறாங்க. நீங்க எனக்கு வச்சிருக்கிற

பேரு 'மாசு' (Maassu'). மாசு தமிழ்ச் சொல்லாம். அதுக்குத்

'தூசு'ன்னு அர்த்தமாம்.

@@@@@@@@

நான் அரைகுறை படிப்பாளி. சினிமாப் பைத்தியம். சினிமாவால

படிப்பை பாதியில எட்டாம் வகுப்போட நின்னுட்ட கூமட்டை.

என்னை மன்னிச்சுக்கடா தங்கம். மாசு தூசியா இருந்தாலும்

பரவாயில்லை. தமிழ்ப் பேருன்னு பெருமைப்படலாம்.

எழுதியவர் : மலர் (18-Aug-25, 9:31 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : masu
பார்வை : 13

மேலே