திண்ணமாய்ச் சொல்லுகிறாய் தேர்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எதுகையில்லை மோனையில்ல ஏற்றகருத் தில்லை;
பொதுவினில் கூறுகிறாய் போங்காய் – எதுவேனும்
பெண்ணை வருணித்துப் பேதலிக்குஞ் சொற்களிலே
திண்ணமாய்ச் சொல்லுகிறாய் தேர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-25, 3:02 pm)
பார்வை : 18

மேலே