தடுமாறியது நெஞ்சம்
கட்டுக் குலையாத அங்கம் நனைத்து
கொட்டும் மழையில் கோலமயில் நின்றாள்
பட்டும் படாமல் அழகியை ரசித்தேன்
சுட்டும் விழியால் சுவைபட முறைத்தாள்
சொட்டும் செங்கனி இதழால் எனை நகைத்தாள்
தட்டுத் தடுமாறினேன் நான் திக்குத் திசைமாறினேன்
அஷ்றப் அலி

