ஓடுதே அணை கட்டு
ஓடுதே ….அணை கட்டு
முதலாளி : இங்க வந்து இவர கவனியுங்க
சர்வர் : என்னெ உங்களுக்கு வேணும்…..சைவமா அசைவமா
சாப்பிட வந்தவர் : ரெண்டயும் கலந்து போடுங்க
சர்வர் : சைவெத்தில எத்தென அசைவத்தல…. கோழி ,கௌதாரி
நாட்டாடு , செம்மரி ஆடு , மீனுல புதுசா பலசா என்னெ
கொண்டார…..
சாப்பிட வந்தவர் : பேசாம சைவ சாப்படே எனக்கு வெய்
சர்வர் : என்னெ கொழம்பு ஊத்த….சாம்பார் , மோர் கொழம்பு, தண்ணி
சாரு , பருப்பு ரசம் , மெளகு ரசம்…பொரியலுக்கு கத்தரிக்காய்,
பொடலங்காய் , பீன்ஸ், முல்லெங்கி , அப்பளம், பஜ்ஜி , தொட்டுக்க
தொவயல், ஊறுகாய்…..
சாப்பிட வந்தவர் : கடிச்சி சாப்பிட மாதிரி ரெண்டு மூனு காயும்
பெனெச்ஜி சாப்பிட சாம்பாரு போதும் …
சர்வர் : போதுமா .. இல்ல இன்னும் உடவா, ஊத்தவா !
சாப்பிட வந்தவர் : என்னெ எல்லாம் தண்ணி மாரி ஓடுதே !
சர்வர் : கடிக்க கஸ்டப்படுவீங்கன்னு எல்லாத்தியும் பெசலா
அரெச்சி ஊத்தனது தான் நீங்க கேட்ட பொரியலோட வந்த
சாம்பார் !
சாப்பிட வந்தவர் : எலையல அணை கட்டி சாப்பட வெச்சிட்டானே !