இதயம் விஜய் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  இதயம் விஜய்
இடம்:  ஆம்பலாப்பட்டு
பிறந்த தேதி :  27-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  7115
புள்ளி:  1539

என்னைப் பற்றி...

அகமே யாக்கை அன்பே உயிர்


விழிகள் உறங்கினாலும் விதைகள் உறங்காது...
தமிழை விதைத்திடு தமிழோடு வாழ்ந்திடு...

இயந்திரவியல் படித்துள்ளேன்.கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். கவிதை, பாட்டு, ஓவியம் தனிமையான நேரங்களில் நான் விரும்பும் சொந்தங்கள்...

என் படைப்புகள்
இதயம் விஜய் செய்திகள்
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2020 6:32 pm

இவ்வளவு தூரம் வந்தும் பாடல் என்ற ஆசை மட்டும் விடவே இல்லை. திரையிசை பாடலின் வரிகளுக்கு மாற்று வரிகள் எழுதிப் பார்ப்பேன். பல்லவி, சரணங்கள், சந்தம் பற்றித் தெரியாது. அந்தப் பாடல் வரியில் நான்கு வார்த்தைகள் இருந்தால், நானும் நான்கு வார்த்தைகள் எழுதுவேன். சின்ன வார்த்தை என்றால் சின்ன வார்த்தைகள், சற்று நீண்ட வார்த்தை என்றால் நீண்ட வார்த்தைகள் எழுதுவேன். அப்படி இருந்த நிலையில் திரையிசை பாடலுக்கு நான் எழுதிய முதல் பாடல் இதுதான்.

"இளைய நெஞ்சிலே இமைக்கும் கண்ணிலே
உன் உருவந்தான் ஓட.... 
இளமை துடித்திட இதயம் வேர்த்திட 
நாளும் உன்னையே தேட.... 
பாலும் நோகுது தேனும் நோகுது 
இராதை இல்லையே கூட.... 

மேலும்

இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2020 6:30 pm

நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் காலத்தில் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டு போவது வழக்கம். அப்போது கடையில் செய்தித்தாள் படிப்பதுண்டு. அதன் கூட வரும் இதழ்களில் கவிதைத் துணுக்குகள் இருக்கும் அதைப் படிப்பது மிகவும் பிடிக்கும். அப்போது கவிதை எழுதியது கிடையாது.

பின் ஒன்பது, பத்து வகுப்புகளிலும் வார இதழ்களில் வரும் கவிதைகளைப் படிக்கும் வழக்கம் தொடர்ந்தது. நீங்கள் நம்ப மாட்டீர்கள், அப்போது வெளிவந்த இதழில் நான் விரும்பிப் படித்த ஒரு கவிதையின் பக்கம் இன்றும் என்னிடம் இருக்கிறது. அன்றைய காலத்தில் பாட்டுப் புத்தகம் வாங்கிப் பாடலைப் பாடி பார்ப்பது என்பது எல்லாரும் மிகவும் விரும்பிய ஒன்று. எனக்க

மேலும்

இதயம் விஜய் - மலர்1991 - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2020 10:42 pm

கொரோனாச் செல்லம், நீ அழகுத் தங்கச் சிலைடி. எங் கண்ணு. உம்மா.
@@@@@
யாரைடா உங்க பாட்டி கொஞ்சிட்டு 'கொரோனா'ச் செல்லம்'னு கூப்படறாங்க.
@@@@@@
போன மாசம் பொறந்த என்னோட பெண் குழந்தையைத்தான் கொஞ்சறாங்க.
@@@@@
என்னது உம் பொண்ணுப் பேரு 'கொரோனா'வா?
@@@@@@
ஆமாம்டா. எங்க பாட்டிதான் அந்தப் பேரை வச்சாங்க.
@@@@@
உலகத்தையே அச்சுறுத்தற அந்த வைரசுப் பேரையா பெத்த குழந்தைக்குவைக்கிறது?
@@@@
அட அன்பரசு, நம்ம தமிழர்கள்ல எத்தனை பேரு அவுங்க பிள்ளைகளுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கிறாங்க?
@@@@@@
ஒரு அஞ்சு சதவீதம் இருக்கும்.
@@@@@@
அப்ப மிச்சம் உள்ள தொண்ணூஞ்சு சதவீதம் தமிழரகள் வேறமொழிப் பேருங்களத்தான் அவ

மேலும்

அச்சுப் பிழை: 'கொரோனா' அறிவியல் பேரு. 20-Mar-2020 10:48 pm
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2020 4:45 pm

என்ன துணிச்சல் உனக்கு - நீ
என்னையே அச்சுறுத்த வந்திருக்கிறாய்...
இன்னும் அலைச்சல் எதுக்கு - நீ
பலரையும் வேரறுத்துச் சென்றிருக்கிறாய்...

யார் தந்த துணிச்சலோ?...
ஏன் இந்த அலைச்சலோ?...
ஓடிவிடு இல்லை ஒதுங்கிவிடு
சூரிய பார்வையால் சுட்டெரிப்பேன்...
உன்னைச் சூரிய பார்வையால் சுட்டெரிப்பேன்...

நீ விதைக்கவில்லை
நீர் தெளிக்கவில்லை
அறுவடை மட்டும் கேட்கிறாயே
நீ என்ன முதலாளி வர்க்கமா?...

கூட்டம் கூட்டிப் பரப்புகிறாய்
கூடும் பலத்தில் மிரட்டுகிறாய்
மக்களைப் பிரித்தும் வைக்கிறாயே
நீ என்ன அரசியல்வாதி வம்சமா?...

பயிர்களை நாசம் செய்வதாய்
உயிர்களை நாசம் செய்கிறாய்
நீ கண்ணுக்குத் தெரிய

மேலும்

இதயம் விஜய் - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2020 9:59 am

வெய்யோன் ஒளிகுளித்து வெந்நீர் உடைநனைத்து
மெய்தொட்டுப் பேசுதல் விட்டொழித்து - மொய்த்துலாவும்
ஈக்களன்ன கூடுதல் இந்நாள் தவிர்த்திடுவீர்
தீக்கொரோனா திக்கற்றுத் தீர்ந்து...

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

மேலும்

அருமை அருமை கொரோனா நேரிசை வெண்பா ! பாராட்டுக்கள். 01-Apr-2020 11:13 am
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திடத் தங்கள் கார்மேக மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே 28-Mar-2020 4:42 pm
அருமை... 22-Mar-2020 10:27 pm
இதயம் விஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2020 9:59 am

வெய்யோன் ஒளிகுளித்து வெந்நீர் உடைநனைத்து
மெய்தொட்டுப் பேசுதல் விட்டொழித்து - மொய்த்துலாவும்
ஈக்களன்ன கூடுதல் இந்நாள் தவிர்த்திடுவீர்
தீக்கொரோனா திக்கற்றுத் தீர்ந்து...

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

மேலும்

அருமை அருமை கொரோனா நேரிசை வெண்பா ! பாராட்டுக்கள். 01-Apr-2020 11:13 am
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திடத் தங்கள் கார்மேக மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே 28-Mar-2020 4:42 pm
அருமை... 22-Mar-2020 10:27 pm
இதயம் விஜய் - மலர்1991 - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2020 3:04 pm

ஏன்டா ஆக்காசு, பேரப் பையா.
@@@@@
என்ன பாட்டிம்மா?
@@@@@@
ஏன்டா ஒலகம் பூரா கொரானாங்கற வைரசு பரவி சனங்களப் படாதபாடு படுத்துது. எதோ நம்ம நாட்டில பாதிப்பு இல்லனு சொல்லறாங்க. எதோ ஒரு சிலருக்கு கொரானா தொத்து இருக்கிறதாவும் அவுங்களத் தனியா வச்சு கவனிக்கறதாவும் சொன்னாங்க. யாரும் பயப்படவேண்டாம்னு சொல்லறா.
@@@@@
சரி நீங்க என்னமோ கேட்டீங்களே?
@@@@@@@
நீ வெளில போயிருந்த போது கொரானான்னு சொல்லிட்டு ஒரு பையன் வந்தான். நீ தான் வரச்சொன்னியாம். ஏன்டா கொரானா உள்ள பையன வீட்டுக்கு எதுக்குடா பேரா வரச்சொன்ன?
@@@@@@
அய்யா பாட்டி. அவன் கொரானா உள்ள பையன் இல்ல. அவம் பேரு ஏக்நாத் குரானா.
@@@@@
என்னது ஏக்கு ந

மேலும்

மிக்க நன்றி கவிஞரே. 20-Mar-2020 10:00 pm
அறியாத் தகவல் ஒன்று அறிந்தேன்... 20-Mar-2020 9:46 pm
நம் நாடு அறிஞர்களும் அறிவியயாளர்களுக்கும் உரிய ஊக்கமும் ஆக்கமும் தர முன்வருவதில்லை. ஆன்மீகத்தை வர்த்தமாக மாற்றி கோடீஸ்வரர்களாகும் சாமிசிகளுக்கே மரியாதை அதிகம். போலிச் சாமியார்கள்,போலி ஆன்மீகவாதிகளின் புண்ணிய பூமி. நன்றி கவிஞரே. 19-Mar-2020 11:44 am
குரானா என்றதும் ஹரி கோவிந்த் குரானா என்ற விஞ்ஞானியின் நினைவு வந்தது gene அறிவியல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் . எழுபதுகளில் தனக்கு ஒரு ஆய்வுக்கூடம் அமைத்து உதவ வேண்டும் என்று அரசாங்க அலுவலகங்களில் post to pillar அலைந்து மன்றாடினார் . கிடைக்கவில்லை .அமெரிக்கா உதவியது .உதவி பெற்றார் . பரிசை வென்றார் . 17-Mar-2020 10:45 pm
இதயம் விஜய் - மலர்1991 - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2020 12:10 pm

ஏன்டா பேரா, சுரேசு, என்னடா நீ ஊட்டுல இல்லாதபோது புதுப்புது காச்சல் உள்ள பிள்ளைங்க எல்லாம் உன்னத் தேடிட்டு வர்றாங்க. நான் வயசான கெழவிடா. எனக்கு அந்தக் காச்சலுங்கள ஒட்டவச்சுட்டுப் போயிட போறாங்கடா. நேத்து கொரானான்னு சொல்லிட்டு ஒரு பையன் வந்தான்.இன்னிக்கு 'சுரானா' சொல்லிட்டு ஒரு வயசுக்கு வந்த பொண்ணு வந்தா. உன்னக் கேட்டா. நான் அவகிட்ட கைசாடை காட்டி போகச் சொலீலிட்டேன்.
@@@@@@
ஏம் பாட்டி போகச் சொன்ன? நான் வரவரைக்கும் அந்தப் பொண்ணை உக்காரச் சொல்லி மோராவது குடுத்திருக்கலாபமே.
@@@@@@
ஏன்டப்பா, சொந்தக் காசில சூனியம் வச்சுக்கச் சொல்லறயா? கொரானா, சுரானான்னு சனியம்பிடிச்ச காச்சல் உள்ள பிள்ளைங்க எல்லா

மேலும்

இதயம் விஜய் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2020 9:30 pm

சிவப்பு நிறத் துப்பட்டா காற்றிலாட
நீல நிற சுடிதாரில்
வீதி வரும் தேவதையே
நீ ஆடி அசைந்து அழகாய் வரும்
உடல் மொழியெல்லாம்
அந்தி வானத்து காதல் பாடலடி !

மேலும்

எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன் சிறந்த கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய செல்வன் 21-Mar-2020 10:50 pm
அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய விஜய் 21-Mar-2020 10:45 pm
செறிந்த கற்பனை சிறந்த சொல் நயம் வேண்டும்... அருமை அருமை இன்னும் எழுதுங்கள் 21-Mar-2020 6:36 pm
அவளின் உடல் மொழியை வானத்துப் பாடல் என்றது மிகவும் அருமை ஐயா... 20-Mar-2020 9:40 pm
இதயம் விஜய் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2020 7:23 pm

தேடி வந்த தென்றல்
----திங்களுடன் வந்தது
மூடிக் கிடந்த முகில்திரையை
----விலக்கி மெல்லச் சிரிக்கிறது
வாடிக் கிடந்த மலர்களெல்லாம்
---- மகிழ்ந்து ஆடுகிறது
வாடி நான் தனிமையில் நிற்கவோ
-----நீ வராதிருக்கிறாய் தோழி !

மேலும்

அருமையான கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய விஜய் 21-Mar-2020 10:53 pm
காதலின் ஏக்க அழைப்பு இனிமை... இனிய வாழ்த்து ஐயா 20-Mar-2020 9:38 pm
தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி . மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் 19-Mar-2020 6:26 pm
காதல் அழைப்பு. அருமை. 19-Mar-2020 3:54 pm
இதயம் விஜய் - மலர்1991 - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2020 9:15 am

அண்ணே நீங்க நம்ம கட்சில சேந்து பத்து வருசம் ஆகுது. இன்னும் நீங்க பிரபலமாகாம இருக்கிறீங்க. உங்கள பிரபலமாக்க என்ன செய்யலாம்.
@@@@@@
இதென்னடா தம்பி பெரிய விசயம். நீ செய்தித்தாள்களைப் படிக்கிறதில்லையா?
@@@@@@
படிக்கிறேன். நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
@@@@@@@
அட தம்பி நாம புதுசா செய்யவேண்டிய விசயம் எதுவும் இல்லை. சில நபர்கள் அவங்க காருக்கு அல்லது வீட்டுக்கு தீ வச்சிருவாங்க. உடனே காவல் நிலையத்துக்கு தொலைபேசி யாரோ தீ வைத்துவிட்டார்கள்னு புகார் குடுப்பாங்க. காவல் அதிகாரிங்க வருவாங்க. அதுக்கு முன்னதாகவே நிருபர்கள் வந்திருவாங்க. அன்று மாலையே எல்லா செய்திகள்லயும் அந்த நபரின் பெயர், பேட்டி எல்லாம் வெள

மேலும்

இதயம் விஜய் - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2019 5:40 pm

பாகம் - 1 :

இளங்கதிர் உதித்துச் சற்று மேலெழும்பும் வேளையில் பசும்புல் வெளிகளில், மலர்களில் உறங்கும் பனித்துளிகள் எங்கோ?... வேலைக்குச் செல்ல தொடங்குகிறது. இரவின் குளிர் மெல்ல மெல்ல குறைந்து, இளந்தென்றல் வீதிகளில் உலாவ, இதமான சூடு இதயத்தைத் தழுவி அணைத்துக் கொள்கிறது.

பூமாலைத் தோரணங்கள், அலங்கார விளக்குகள், வாசலில் வண்ணப் பூக்களின் மணம் வீசி அசைந்து கொண்டிருக்கும் பூஞ்செடி கொடிகளோடு ஒரு திருவிழா கோலத்தில் அரண்மனை போன்ற அந்தப் பெரிய மாடிவீடு காட்சியளிக்கிறது. நாற்பது நாற்பத்தைந்து வயது உடைய தோற்றத்தில் இராசேந்திரன், கல்யாணி என்ற தம்பதிகள் இருவரின் மேற்பார்வையில் எல்லோரும் பரப்பரப

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (94)

கவிஞர் விஜெ

கவிஞர் விஜெ

சேவூர்-ஆரணி
அக்பர்

அக்பர்

காஞ்சிபுரம்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (94)

இவரை பின்தொடர்பவர்கள் (95)

user photo

podiyan

mathurai
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே