கவிஞர் விஜெ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/bewvu_45913.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் விஜெ |
இடம் | : சேவூர்-ஆரணி |
பிறந்த தேதி | : 30-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 1142 |
புள்ளி | : 13 |
தமிழ் என் அறிவுrnதமிழ் என் ஆற்றல்rnதமிழ் என் இமைrnதமிழ் என் ஈதல்rnதமிழ் என் உயிர்rnதமிழ் என் ஊக்கம்rnதமிழ் என் எண்ணம்rnதமிழ் என் ஏற்றம்rnதமிழ் என் ஐம்புலன்rnதமிழ் என் ஒளிrnதமிழ் என் ஓசைrnதமிழ் என் ஔவை rnrnகவியுலகில் நான் பிறந்த குழந்தை......
கண்ணீர் துளியை
துடைத்திட யாருமில்லை,
கடவுளுக்கு தெரிந்தும்
அவனுக்கு நேரமில்லை.
துடிக்கும் இதயத்தை
நிருத்த முடியவில்லை,
துடிப்பதே உனக்காகத்தான்-என
தெரிந்ததால் அதைசெய்ய மனமுமில்லை.
ஏங்கிடும் மனதிற்கு
தெரியவில்லை,
தான் ஏங்கிடும் ஏக்கத்திற்கு
விடைதான் ஏதுமில்லை.
பாதைகள் துளியும்
குறையவில்லை,
தனிமையின் தூரத்திற்கு
ஏதும் எல்லையில்லை.
வருமையின் ஈரம்
காயவில்லை,
இருந்தும் உனை மறந்து வேரொரு
வழிதேட தோன்றவில்லை.
உள்ளத்தின் காயங்கள்
ஆரவில்லை,
பக்கத்தில் அணைத்து முத்தமிட
நீயுமில்லை.
கனவிலும் காட்சிகள்
முடியவில்லை,
அறிந்தேன்
இதுவே தனிமையின் கோர எல்லை.
அம்மாவில் அழத்தொடங்கி
அம்மியில் அரைத்தார்ப்போல்
மம்மியில் மாண்டுபோகும் தமிழுக்கே ஒரு தமிழ் கவியாம்!!
-------------------------------------------------------------------------------------------
நாளைய தமிழும் தமிழரும் (பொங்கல் கவிதை போட்டி 2015)
-------------------------------------------------------------------------------------------
சங்கம் வளர்த்தது நேற்றைய தமிழ்
சுங்கம் தளர்த்தது இன்றைய தமிழ்
எங்கனம் போகுமோ என் நாளைய தமிழ்.!!
தூய தமிழ் மொழி கூட
ஆங்கிலத்தின் சாயம்பட்டு
அங்கங்கே நிறம் மாறி
அடையாளம் தெரியாது.!
அடுத்த தலைமுறையும் அறியாது.!
நாளை கல்வெட்டில் காணும் தமிழ்!
கண
நான் சிரிக்க
அவள் சிந்திடுவாள்...
என் சுமைகள் கூட
அவள் சுமந்திடுவாள்...
எண்ணங்கள் முன்னேற பல
அவள் தந்திடுவாள்...
பலநேரம் செய்யாத தவறுக்கு
கை காட்டிடுவாள்...
தக்க சமயத்தில் தந்தை முன்
என்னை காத்திடுவாள்...
தாய்க்கு இணையாகி
அன்பை ஊட்டிடுவாள்...
செல்லமாய் சினுங்கிக்கொண்டே
என்மேல் கைநீட்டிடுவாள்...
மழையில் நனைந்த என்
தலையை துவட்டிடுவாள்...
கோபமாய் கொஞ்சும் தமிழில்
அர்ச்சனை செய்திடுவாள்...
திருமணம் நடந்து சென்றாலும் என்
குரலைகேட்டுதான் தினம் தூங்கிடுவாள்...
ஆயிரம் உறவுகள் கடிந்தாலும் அண்ணன்
என அழைக்க மற(றுத்)ந்திடுவாள்...
காலை எழுந்ததும்
இயற்கையின் மடியில்
கொஞ்சி விளையாடிய நாட்கள் போய்,
மழையின் கோரதாண்டவத்தால்-இன்று
இயற்கை அண்ணையிடம்
மண்டியிட்டு கிடக்கிறோம்!!
உன் பிள்ளைகளை காப்பாற்றென்று...
ஓ... மழையே..!
உன் பெருவெள்ளத்தால்
அடித்துச்சென்றது எங்களின் பொருளாதாரம் மட்டுமல்ல,
ஏனைய ஐம்பது ஆண்டுகால வாழ்வாதாரத்தையும் தான்..!
ஓ...மின்னலே..!
நீ வெட்டிச்சென்றது எங்களின் பார்வையை மட்டுமல்ல,
எங்கள் எதிர்காலத்தையும், தொலைநோக்கு பார்வையையும் தான்.!!
ஓ...இடியே...!
நீ இடித்துரைத்ததில் இடிந்தது எங்களின் வீடுகள் மட்டுமல்ல,
எண்ணற்ற மனிதர்களின் இதயத்தையும் தான்..!!
போதும்....
எங்கு பார்த்தாலு
உன்னை ஒதுக்கியவர்க்கும், ஒதுக்குபவர்க்கும்
முதலில் நன்றியை நீ சொல்லிவிடு!
தனித்துவத்தின் அத்தியாயமே முதலில்
அங்குதான் துவங்குகிறது.
மாலையில் மங்கும் சூரியன் மறுநாள்
காலையில் உதிக்கும் மறவாதே!
நதியின் நடுவில்
பாறைககள் இன்றி
சங்கீதத்தின் ஓசையில்லை தளராதே!
ஒருநாள் வாழ்வும்
மின்மினிப்பூச்சியாய்
ஒளிமங்காமல் வாழ்ந்துவிடு!
கையிலும்,பையிலும்
ஏதுமில்லை என என்னாமல் முயற்சியை
தூண்டிலாக்கி வின்மீனுக்கே தூண்டிலிடு..!!
அ ழகை ஓரங்கட்டி அடிமனதை ஆழ்ந்து ரசிப்பது - காதல்.
ஆ ட்சி செய்யும் அரசனனாலும் அழகிக்காக விட்டொழித்து வருவது - காதல்.
இ மைப்பொழுதும் இடைவிடாமல் இன்புற்றிருப்பது - காதல்.
ஈ டுயினை பாராமல் ஈன்றப்பொழுதெல்லாம் இணைந்து வாழ்வது - காதல்.
உ ள்ளம் இசைந்து உறவவோடு உறவாக உயர்வு பெருதல் - காதல்.
ஊ னத்தை பார்வையில் கொள்ளாமல் ஊக்கப்படுத்துவது - காதல்.
எ ள்ளளவும் காமமில்லாமல் எடுத்துக்காட்டாய் திகழ்வது - காதல்.
ஏ ழ்மையிலும் அன்பை மட்டும் ஏழ்மைப்படுத்தாமல் ஏற்றமாய் வைத்துக்கொள்வது - காதல்.
ஐ யமின்றி கரம்கோர்த்து கல்லறைவறை நடைபோடுவது - காதல்.
ஒ ருங்கே வாழ்ந்து,ஒவ்வொரு நொடியும் கண்முன்