எது காதல்
அ ழகை ஓரங்கட்டி அடிமனதை ஆழ்ந்து ரசிப்பது - காதல்.
ஆ ட்சி செய்யும் அரசனனாலும் அழகிக்காக விட்டொழித்து வருவது - காதல்.
இ மைப்பொழுதும் இடைவிடாமல் இன்புற்றிருப்பது - காதல்.
ஈ டுயினை பாராமல் ஈன்றப்பொழுதெல்லாம் இணைந்து வாழ்வது - காதல்.
உ ள்ளம் இசைந்து உறவவோடு உறவாக உயர்வு பெருதல் - காதல்.
ஊ னத்தை பார்வையில் கொள்ளாமல் ஊக்கப்படுத்துவது - காதல்.
எ ள்ளளவும் காமமில்லாமல் எடுத்துக்காட்டாய் திகழ்வது - காதல்.
ஏ ழ்மையிலும் அன்பை மட்டும் ஏழ்மைப்படுத்தாமல் ஏற்றமாய் வைத்துக்கொள்வது - காதல்.
ஐ யமின்றி கரம்கோர்த்து கல்லறைவறை நடைபோடுவது - காதல்.
ஒ ருங்கே வாழ்ந்து,ஒவ்வொரு நொடியும் கண்முன்னே அவள் முகம் மிண்ணி மறைவது - காதல்.
ஓ ஃகி புயலாய் அவள் என்னை சுழற்றியடித்தாலும் என் மனம் அவளை மட்டுமே சுழன்றுகொண்டிருப்பது - காதல்.
ஔ வையும்,தமிழும் போல் வயதைக்கடந்து ஒருவர்மேல் ஒருவர் பாசத்தால்
பிண்ணிப்பினைந்திருப்பது - காதல்.💐