நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015

அம்மாவில் அழத்தொடங்கி
அம்மியில் அரைத்தார்ப்போல்
மம்மியில் மாண்டுபோகும் தமிழுக்கே ஒரு தமிழ் கவியாம்!!
-------------------------------------------------------------------------------------------
நாளைய தமிழும் தமிழரும் (பொங்கல் கவிதை போட்டி 2015)
-------------------------------------------------------------------------------------------

சங்கம் வளர்த்தது நேற்றைய தமிழ்
சுங்கம் தளர்த்தது இன்றைய தமிழ்
எங்கனம் போகுமோ என் நாளைய தமிழ்.!!

தூய தமிழ் மொழி கூட
ஆங்கிலத்தின் சாயம்பட்டு
அங்கங்கே நிறம் மாறி
அடையாளம் தெரியாது.!
அடுத்த தலைமுறையும் அறியாது.!

நாளை கல்வெட்டில் காணும் தமிழ்!
கண்ணறியும் காட்சிப் பொருள்!
கடல் கடந்த தமிழனுக்கோ - அது
கற்கமுடியா கடின மொழி!

என்ன மொழி இதுவென்று
என் மகனும் கேட்பானோ.?
என் மகன் மட்டும் பேசுவதால்.?
யாருக்கும் புரியாதோ.??

என்னுள்ளம் சொல்லுவது
என் தமிழென்றும் அழியாது!
அழியும் என்று சொல்லாதீர்
அது வளரும் விதம் அறியாது!

எழுத்துக்கள் தளமாகும்
அதில் எழுதுவதால் வளமாகும்
இதில் நாளை தமிழ் நலமாகும் - நாளை
தமிழர் கண்ட களமாகும்!


இது என் கற்பனை சுய படைப்பு
பெயர் -சக்தி
வயது - 23
வசிப்பிடம்- சென்னை, தமிழ்நாடு, இந்தியா
+91 8124 775414

எழுதியவர் : சக்தி (14-Jan-15, 11:02 am)
பார்வை : 659

மேலே