சோட்டு வேதா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சோட்டு வேதா |
இடம் | : கொங்கு மண்டலம் |
பிறந்த தேதி | : 28-Jun-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 538 |
புள்ளி | : 81 |
இதயத்தின் இதயம்
திகைத்துதான் போகிறேன்......
உன்னில் இருந்து மீண்டு
மீளாத தூரம் சென்றபிறகும்
என் இமையோரம்
கண்ணீராய் உறவாடும்
உன் காதலால்............!
நான் என் கைபேசியின்
தொடுதிரையை.........
உயிர்ப்பிக்கும் போதெல்லாம் !
என் புன்னகையும்
உயிர்பிக்கப்படுகிறது...............
உன் புகைப்படத்தால்!
காத்திருப்பு என்னவோ
அதே பேருந்து நிலையத்தில் தான்!
இருந்தும் சில வேறுபாடுகள்........
அன்று நீ.......
இன்று நான்......
நான் வருவதால் காத்திருந்தாய் நீ........
நீ வரப்போவதில்லை என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன் நான்........
கையில் எனக்கான பரிசுடன்
காத்திருந்தாய் நீ.....
நெஞ்சம் முழுதும் உனக்கான
காதலுடன் மட்டும் காத்திருக்கிறேன் நான்.........
ஐந்து நிமிட சந்திப்பிற்காய் காத்திருந்தாய் நீ........
அதே ஐந்து நிமிடத்திற்காய் காத்திருக்கிறேன் நான்........
உன் நினைவோடும்
அசைவின்றி தூங்கும் கடிகார முட்களோடும்!
காதலில் கசிந்துருகி
கனவுகளில் தொலைந்து விட்டேன்........!
உன் பாதம் போகும்
பாதைகளில் சருகுகளாய்
சிதறிக்கிடக்கிறேன்..................!!
யாருமற்ற போர்க்களத்தில்
ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் விடுகிறேன்
உன் நினைவுகளின் படையெடுப்பால்............!!!
உயிரற்ற விழிவழியே......
உணர்வற்ற கவிதை
படிக்கிறேன்.........
புரிந்து கொள்ள ஏதும் இல்லாத போதும்
பிரிந்து செல்ல மனமின்றி
கவிதை வரிகளிடையே
தேங்கி விடுகிறேன்................!!!!
விழுந்துவிடவில்லை என்ற போதும்
எழுந்து விட முடியவில்லை............!!!!!
ஏனடா வதைக்கிறாய்.......?
தென்றலுக்கே சாய்ந்து விட்ட
ஆலமரமாய்.......
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
என் காதலே!
உன் குரல் கேட்கும் போதெல்லாம்
உன் விரல் பிடிக்க ஏங்கி............
மதிமுகம் பார்க்க தயங்கி..........
உனதிரு கருவிழியில் தொலைந்து போகிறேன்........
தினமும் கனவில்!
என் உயிரே!
காதல் ஊற்றேடுக்க......
கண்ணீர் ஓடையில்........
கவிதை கப்பலாய்........
என் கனவுகள் உனக்காய்!
பாரதியை சபிக்கிறேன்!
ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?
கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?
மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?
சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!
கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!
விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?
தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்
ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?
பெருங்கனவு பொசுங்கிவிட்ட
ப
உருட்டி வைத்த மைதா மாவு
அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால் நாம் குறைந்தது 10 முதல் 20 கோடி வருடங்களாவது பின்னோக்கிப் போக வேண்டியிருக்கும்.
10 முதல் 20
எப்போது..........
உன்னில் தொலைந்தேன்
என்று தெரியவில்லை!
எங்கு...........
உன்னை தொலைத்தேன்
என்றும் தெரியவில்லை!
இப்போது.........
யாரை தேட
நான் தொலைத்த உன்னையா?
இல்லை
உன்னில் தொலைந்த என்னையா?
பொசுக்கி நீபோட்ட
அந்த சிகரட் பெட்டிக்கு
இல்லாத உயிர்
பாழாய்ப் போன
இந்த மனத்துக்கு
இருந்து தொலைத்ததால்
நசுக்கிப் போட்டது
வலித்த போதிலும்
கசக்கிய உன்னிடத்திலேயே
கண்ணீர் மல்க நின்று
ஆறுதல் தேடுகிறது..!
~ தமிழ்க்கிழவி (2018 )
நீ
மழலையென என் மடி சாய்ந்து
கவிதையென சிரிக்கிறாய்..........
நான்
காதல் மறந்து
காமம் துறந்து
தாய்மையில் திளைக்கிறேன்..........
கனவில்!