ரணப்பட்ட மனம்

பொசுக்கி நீபோட்ட
அந்த சிகரட் பெட்டிக்கு
இல்லாத உயிர்
பாழாய்ப் போன
இந்த மனத்துக்கு
இருந்து தொலைத்ததால்
நசுக்கிப் போட்டது
வலித்த போதிலும்
கசக்கிய உன்னிடத்திலேயே
கண்ணீர் மல்க நின்று
ஆறுதல் தேடுகிறது..!
~ தமிழ்க்கிழவி (2018 )

எழுதியவர் : தமிழ்க்கிழவி (23-Oct-18, 5:46 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 292

மேலே