கலா பாரதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கலா பாரதி |
இடம் | : ஓசூர் |
பிறந்த தேதி | : 05-Dec-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 796 |
புள்ளி | : 132 |
உனக்கான இலக்கை நிர்ணயம் செய்..
அந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்..
பயணத்தின் போது வேகம் கொள்..
வேகத்தோடு விவேகமும் கொள்..
தடைகள் வரலாம் தாண்டிச் செல்..
பிழைகள் ஏற்படலாம் திருத்திக் கொள்..
தோல்விகள் காணலாம் கற்றுக் கொள்..
கற்றுக் கொண்டதை நினைவில் கொள்..
நினைவில் கொண்டதை பயிற்சி செய்..
பயிற்சியோடு முயற்சியும் செய்..
உனக்கான இலக்கை தொட்டுவிடலாம்.
தமிழே..
தாய் மொழியே...
அனைத்து மொழிகளுக்கும்
ஆதியும் நீயே..
அழகிய தமிழே..
அழியா மொழியே..
அமுதமும் நீயே..
தித்திக்கும் தேனே..
திகட்டாத சுவையே..
செந்தமிழும் நீயே..
அர்த்தமுள்ள சொற்களை
அள்ளிக் கொடுக்கும்
அற்புத மொழியே..
மழலை பேசும்
கொஞ்சு தமிழும் நீயே..
படைகள் முழங்கும்
வீரத்தமிழும் நீயே..
கவிஞன் பாடும்
காதல் தமிழும் நீயே..
காலம் போற்றும்
சங்கத் தமிழும் நீயே..
தமிழே மொழியே..
அழியா ஒளியே..
உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்.
அச்சமே...
என்னை ஆட்டிப் படைத்தது போதும்
என்னை விட்டுப் போய்விடு
நான் அழிவிலிருந்து மீள வேண்டும்..
தயக்கமே
எனக்கு தடையாய் இருந்தது போதும்
என்னை விட்டுப் போய்விடு
நான் நினைத்ததை செய்திட வேண்டும்..
பதட்டமே
என்னை பதறவைத்தது போதும்
என்னை விட்டுப் போய்விடு
நான் எதையும் சிறப்பாய் முடிக்க வேண்டும்..
நீங்கள் மூவரும்
முகமூடியாய் நின்று
என்னை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..
நீங்கள் விலகிவிட்டால்
நான் அனைவருக்கும்
என்னை அடையாளம் காட்டிவிடுவேன்..
போய்விடுங்கள் என்னை விட்டு
நாளை மருமகளாகப் போகும்
என் மகளே..
செல்லமாய் வளர்ந்தவள் நீ..
செல்வதற்குத் தயாராகிவிட்டாய்..
விளையாட்டுப் பெண்ணாகவே இருந்தவள் நீ..
விளக்கேற்றத் தயாராகிவிட்டாய்..
என் மகளாக இருந்தவரை
ஏழு மணிக்குதான் எழுவாய்..
நாளை முதல்
விடியும் முன் விழிக்க வேண்டும்..
நினைவில் கொள்..
அம்மா காபி எங்கே...
என்று இனி மறந்தும் கேட்காதே..
நாளை முதல்
அனைவருக்கும் நீதான் காபி தயாரிக்க வேண்டும்..
நினைவில் கொள்..
பசி தாங்காதவள் நீ..
நாளை முதல் பரிமாறிவிட்டு பின் உன் பசியாற்ற வேண்டும்..
நினைவில் கொள்..
சட்டென கோபம் கொள்வாய் நீ..
நாளை முதல்
எதுவந்த போதும் சகித்துப் போக வேண்டும்..
நினை
உன் மூச்சுக் காற்றை
நானும் சுவாசிக்கிறேன்..
உன் இரத்தம் உறுஞ்சி
நானும் வளர்கிறேன்..
நீ பேசும் வார்த்தைகளை
நானும் கேட்கிறேன்..
நீ பார்க்கும் அத்தனையும்
நானும் உணர்கிறேன்..
உன் மகிழ்ச்சியே
எனக்கு உற்சாகம்..
உன் சோகமே
எனக்கு சோர்வு..
உன் வளையல் ஓசை
எனக்கு இனிமையான இசை..
உன் சிந்தனை யாவும்
என் சிந்தையிலும் ஊறும்..
அம்மா..
நீ நலமாக வாழ்ந்துவிடு..
என்னை நலமுடன் பெற்று எடு..
மறைந்தாலும்
மீண்டும் உதிக்கும் சூரியனாய் மறைந்திடு..
விழுந்தாலும்
விரைந்தோடும் வீழ்ச்சியாய் விழுந்திடு..
எழுந்தாலும்
நிமிர்ந்து நிற்கும் மலையாய் எழுந்திடு..
எரிந்தாலும்
ஒளி வீசும் எரிக்கல்லாய் எரிந்திடு..
மின்னல் வேகம் உனதாக்கு..
தடுக்கும் தடைகளை தூளாக்கு..
வெற்றிக் கொடியை நீ ஏந்து..
ஒருநாள் மட்டுமே
பிறக்கும் மனிதா...
நீ...
ஒவ்வரு நாளும்
இறப்பது முறையா
சரியோ தவறோ
சாதனை வேண்டும்
முறையாய்ப் பயின்று
மேகத்தைத் தாண்டு
எத்தனை நாளடா
இழிவுகள் கண்டோம்
ஏளனச் சிரிப்பாள்
நாட்களை கொண்டோம்
உறங்கிய போதும்
உலகம் உருளும்
நீ...
உருளாதிருந்தால்
பிறந்தது ஏனோ
கருவறை உதைத்து
பூமிக்கு வந்தாய்
இன்று...
கல்லறை உடைத்து
எழடா மனிதா...!
புழுவாய்ப் பிறந்தால்
புரளத்தான் வேண்டும்
எலியாய்ப் பிறந்தால்
தனிவலை வேண்டும்
பாம்பாய்ப் பிறந்தால்
சீறதான் வேண்டும்...!
மனிதனாய் பிறந்தால்
மாறத்தான் வேண்டும்
எத்தனை தோல்வியோ
எண்ணி வைத்துக்கொள்
எண்ணிக்கை
நம் கண்களுக்குள்
சந்திப் பிழை🍁
நீ என் தமிழானதால்🍁
யுத்தம் செய்து
களைத்துப்போன எனக்கு
நீர் வேண்டாம்
உணவு வேண்டாம்
உறக்கம் வேண்டாம்
என் அருமை மகளின்
ஒரு முத்தம் போதும்...
இப்படிக்கு
எல்லை பாதுகாப்பு வீரன்..
என்னுள் பூத்த முத்தே..
உனக்கு அன்னை நான் எழுதியக் கடிதம் படிக்கின்றேன்
கொஞ்சம் செவி கொடுத்துக் கேளாயோ!
உன் செவ்விதழ் பூக்கும் புன்சிரிப்பை
புன்னகையோடு நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?
உன் திராட்சைக் கண்களை
நீ உருட்டி தேடும் காட்சியை
நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?
உன் பிஞ்சுக் கால்களை
நான் வருட...
உன் சின்ன குரலில் நீ சிணுங்கும்
சிணுங்களை ரசிக்க காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?
உன் ஆசைப் பொருளை
எடுக்க
நீ தத்தித் தவழ்வதை
நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?
உன் குட்டிக் கைகளை நான் பிடிக்க..
எனைபற்றிக்
உயிர்விட்டு
காத்திருக்கிறேன்
உனக்காக.....
தட்டில் மீன்..
வராத தலைவலியும்
வந்துசேரும்
வரதட்சனை என்ற
வார்த்தையை கேட்டால்
பெண்ணை பெற்றவர்களுக்கு...
தன் தவத்தால்
கிடைத்த வரமாய்
பெற்ற மகளை
தாரைவார்த்து கொடுக்க
தரவேண்டுமாம்
சீதனம்...
படித்தவள்
பண்புள்ளவள்
பார்க்க அழகானவள்
இவை இருந்தபோதும்
புன்னகைக்கும் பெண்ணுக்கு மதிப்பில்லை பொன்நகை இல்லையெனில் புகுந்த வீட்டில்...
பிறந்த வீட்டை பிரிந்து
புதுமுகத்தவனோடு வாழ்ந்து
புத்துயிரை சுமந்து
பிரசவத்தில் உயிர்த்தெழுந்து
வாழும்வரை சார்ந்தவர்க்கு
சேவை செய்யும் பெண்ணுக்கு
எங்கே சீதனம்?
தரமுடியுமா?
பெட்டிக்குள் பூட்டிவைக்கும்
பொன்னைவிட
பெண்ணே உயர்ந்தவள்.
வம்சத்தை வாழவைப்பது
பணமில்ல