என்னைவிட்டு போய்விடு
அச்சமே...
என்னை ஆட்டிப் படைத்தது போதும்
என்னை விட்டுப் போய்விடு
நான் அழிவிலிருந்து மீள வேண்டும்..
தயக்கமே
எனக்கு தடையாய் இருந்தது போதும்
என்னை விட்டுப் போய்விடு
நான் நினைத்ததை செய்திட வேண்டும்..
பதட்டமே
என்னை பதறவைத்தது போதும்
என்னை விட்டுப் போய்விடு
நான் எதையும் சிறப்பாய் முடிக்க வேண்டும்..
நீங்கள் மூவரும்
முகமூடியாய் நின்று
என்னை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..
நீங்கள் விலகிவிட்டால்
நான் அனைவருக்கும்
என்னை அடையாளம் காட்டிவிடுவேன்..
போய்விடுங்கள் என்னை விட்டு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
