விபத்து

இரவு தூங்கி
விழித்து
சுறு சுறுப்பாய்
எப்பொழுதும்
போல் நான்
தன் பணியில்
சிரத்தையோடு
எப்பொழுதும்
போல்
என் இதயம்
நொடிதானில்
எதிர்பாராது
ஏற்பட்ட விபத்து
புரியாது
இதய துடிப்பின்
தாளலயம் மாற
பெரிய போராட்ட
சூழலில்
கடைசி வரை
முயற்சித்து
தோற்றுப் போக
காதில் மட்டும்
சிறிய
இரத்த கசிவு
என் இதயம்
தன்
துடிப்பை நிறுத்த
மருத்துவமனை
பிணவறை
மேடையில்
வெளியுலகை
பார்த்தபடி
அமைதியாய்..,