என்றும் செல்வி

சிறப்பு மிக்க வேலை உண்டு
சீர் செய்ய என்றும் குடும்பம் உண்டு
அதிகாரம் நிறைந்த பதவிலேயே - அமர்ந்து இன்று
அனைவரையும் ஆளும் திறமையுண்டு
அழாகால் மிளிரும் பெண் நானென்று
அக்கம் பக்கத்தினர் வர்ணிப்பதுண்டு
அனைத்தின் மீதும் நாட்டமுண்டு
ஆனால் என் மன கோட்டையுள்ளே
ஆண்மகனுக்கென்று ஒர் இடமில்லை
அதற்கான காரணம் தெரியவில்லை - என்றாலும்
அதனால் எனக்கு இழப்புமில்லை
தாயவள் என்னிடம் தன்மையுடன்
தந்தையும் பேச்சால் மென்மையுடன்
ஆணுக்கு தாரமாக வேண்டுமென்று
அன்பாய் சொல்லி சென்றனரே - அச்சொல்லோ
மரவேரினில் வெந்நீர் ஊத்தியதைப் போல்
வேதனை செய்யுது மனக் கூட்டினிலே
செருக்காய் இதை நான் சொல்லவில்லை
என்றும் செல்வியாய் இருக்கவே ஆசையம்மா.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (30-Jan-19, 7:24 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : endrum selvi
பார்வை : 320

மேலே