நம்பிக்கை நண்பன்

ஒருநாள் மட்டுமே
பிறக்கும் மனிதா...

நீ...
ஒவ்வரு நாளும்
இறப்பது முறையா

சரியோ தவறோ
சாதனை வேண்டும்

முறையாய்ப் பயின்று
மேகத்தைத் தாண்டு

எத்தனை நாளடா
இழிவுகள் கண்டோம்

ஏளனச் சிரிப்பாள்
நாட்களை கொண்டோம்

உறங்கிய போதும்
உலகம் உருளும்

நீ...
உருளாதிருந்தால்
பிறந்தது ஏனோ

கருவறை உதைத்து
பூமிக்கு வந்தாய்

இன்று...
கல்லறை உடைத்து
எழடா மனிதா...!

புழுவாய்ப் பிறந்தால்
புரளத்தான் வேண்டும்

எலியாய்ப் பிறந்தால்
தனிவலை வேண்டும்

பாம்பாய்ப் பிறந்தால்
சீறதான் வேண்டும்...!

மனிதனாய் பிறந்தால்
மாறத்தான் வேண்டும்

எத்தனை தோல்வியோ
எண்ணி வைத்துக்கொள்

எண்ணிக்கை கூடிவிட்டால்
எழுதி வைத்துக்கொள்

மண்ணில் உனக்கொரு
வழி பிறக்கும்


உன் ...
கண்ணில் தீப்
பொறி பிறக்கும்

ஒட்டு மொத்தத்
தோல்விகளை

வெட்டி வீழ்த்தி
எரித்திடுவாய்...!

நம்பிக்கை நண்பன்
நானிருக்க...

நாளைய உலகம்
நமக்கடிகை.

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 11:52 am)
Tanglish : nambikkai nanban
பார்வை : 1161

மேலே