வெற்றித் துளிகள்

மறைந்தாலும்
மீண்டும் உதிக்கும் சூரியனாய் மறைந்திடு..
விழுந்தாலும்
விரைந்தோடும் வீழ்ச்சியாய் விழுந்திடு..
எழுந்தாலும்
நிமிர்ந்து நிற்கும் மலையாய் எழுந்திடு..
எரிந்தாலும்
ஒளி வீசும் எரிக்கல்லாய் எரிந்திடு..
மின்னல் வேகம் உனதாக்கு..
தடுக்கும் தடைகளை தூளாக்கு..
வெற்றிக் கொடியை நீ ஏந்து..