பையன் பேரு ஆனால்

பையன் பேரு 'ஆனால்'
#################
பள்ளி மாணவர் சேர்க்கை.
@@@@

தலைமை ஆசிரியர்:
பையனின் பிறப்புச் சான்றிதழைக்

கொடுங்க.

@@@@@@

இந்தாங்க ஐயா.

@@@@@

பையன் பேரு 'பட்'. இந்தப் பேருக்கு


அர்த்தம் தெரியுமா?

@@@@@@

தெரியாதுங்க. மற்ற தமிழர்கள் மாதிரி

பையனுக்கு இந்திப் பேரை வைக்க

ஆசைப்பட்டோம். 'ஆலியா பட்'ங்கிற

பேரைக் கேள்விப்பட்டோம். நாங்க பிறப்புச்

சான்றிதழ் பதிவு செய்ய நரசு அம்மா

பையன் பேரைக் கேட்டாங்க. நாங்க

"பையன் பேரு 'பட்'" ன்னு சொன்னமுங்க

ஐயா.

@@@@@@@

'பட்' சரிங்க. ஆனால் பையன் பேரு பிறப்புச்

சான்றிதழில் 'But'ன்னு அச்சாகி இருக்குது.

பையனின் தாய் தந்தை இரண்டு பேரும்

எந்த வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கறீங்க?

@@@@@@@@@

நாங்க இரண்டு பேரும் தமிழர்கள் தான்

ஆனால் பீகார்ல பொறந்து

வளர்ந்தவங்க. எங்களுக்கு

எழுதப் படிக்கத் தெரியாதுங்க. நாங்க

தமிழ்நாட்டுக்கு செங்கல் சூளை

வேலைக்கு வந்து இரண்டு வருசம்

ஆகுதுங்க

கையெழுத்து மட்டும் தமிழ்ல போடக்

கத்துட்டமுங்கோ.

@@@@@@

சரி. சரி. பையன் பேருக்கு 'ஆனால்'ன்னு

அர்த்தம். அவனுக்கு வேற இந்திப் பேரை

முடிவு பண்ணீட்டு வாங்க. அப்பறம் அந்தப்

பேரை எப்படி சட்டப்பூர்வமா மாத்தறதுன்னு

சொல்லறேன்.

@@@@@@@

சரி வர்றமுங்க ஐயா.

எழுதியவர் : மலர் (20-Jul-25, 11:21 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : paiyan peru aanaal
பார்வை : 14

மேலே