அண்டாதான் - குண்டாதான்

செல்பேசியில்: நண்பா நாக்ரேஜர்ஜி, உன் மனைவிக்கு ஆண்

குழந்தை பொறந்திருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.

@@@@@

ஆமாண்டா அழ்கேஜர்ஜி.

@@@@@@@@

ஏண்டா எனக்குச் சொல்லவே இல்லை.

@@@@@@

வேலைப்பளு அதிகம்டா. மறந்துட்டேன்.

@@@@@@

சரி. உன் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு

அழைச்சிட்டு வந்திட்டயா?

@@@@@@@@@@

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அழைச்சிட்டு வந்தேன்.

@@@@@

நல்லது. நாளைக்கு வந்து பார்க்கிறேன்.

@@@@@@@@@@@@

(வீட்டில்) பேரப் பையா உன்ற பையன் உன்னை மாதிரியே

அழகா இருக்கிறாண்டா. அவனுக்குப் பேரு வச்சிட்டீங்களா?

@@@@@@@@@@@@

இன்னிக்கு செய்தித்தாள்ல ஒரு பெரிய தொழிலதிபர் பேரைப்

பார்த்தேன். வடமாநிலத்துக்காரர். அவர் பேரு 'கப்தான் சிங்'.

'கப்தான்' புதுமையான பேரு. அர்த்தம் இல்லாத இந்திப் பேரு.

அந்தப் பேரையே உங்க கொள்ளுப் பேரனுக்கு வைக்கலாம்னு

நானும் என் மனைவி முஸ்கான்ராஜியும் முடிவு

பண்ணிருக்கிறோம் பாட்டி.

@@@@@@@@@@@

ஏண்டா பேரப் பையா 'கப்புதான்' ங்கிறது ஒரு பேரா? அதுக்கு

அண்டாதான், குண்டாதான், சட்டிதான், பானைதான்னு எதாவது

ஒரு பேரை வச்சிடலாமே. என்னடா பேரு வைக்கறீங்க?

@@@@@@@@@

பாட்டி குழந்தைகளுக்கு புதுமையான யாரும் அவுங்க

பிள்ளைகளுக்கு வைக்காத இந்திப் பேரை வச்சாத்தான் நம்மள

நாலு பேரு மதிப்பாங்க.

@@@@@@@@@

அப்ப சரிடா கொள்ளுப் பேரா.

எழுதியவர் : மலர் (21-Jul-25, 7:42 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 14

மேலே