வாழ்வோம்வளர்வோம்

வாழ்வோம்..வளர்வோம்
20 / 07 / 2025
பறவைகளுக்கு
வீடில்லை..நாடில்லை..
எந்த மரமும் சொந்த மரம்தான்
எந்த நாடும் சொந்த நாடுதான்
எல்லா பறவைகளும்
சொந்த பந்தங்கள்தான்.
சுதந்திரமாய் கட்டுப்பாடில்லாமல்
கிடைப்பவற்றில்
தனக்கு உண்டானதை
தனக்கு வேண்டியதை மட்டும்
அனுபவித்து முழுதாய் வாழ்ந்து
படைப்பின் ரகசியம்
பசித்து.. ருசித்து போகிறதே

தேனீக்கள்..
அதற்கு
பூக்களில் பாகுபாடில்லை
பூக்களில் வேறுபாடில்லை
அதற்குத் தேவை
தேன் மட்டும்தான்.
அதற்கு முக்கியம்
தேன் கூடு மட்டும்தான் .
அந்த சுறுசுறுப்பு
அதன் உழைப்பு
மற்றைவையெல்லாம்
அதற்கு கால் தூசுதான்.
அந்த பறவைகளைப்
பார்ப்போம்..படிப்போம்
தேனீக்களைத் தொடருவோம்
அவைகள் சொல்லும்
கீதா உபதேசம்
வாழ்வில் பின்பற்றி
வாழ்வோம்..வளர்வோம்

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (20-Jul-25, 11:43 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 47

மேலே