எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பார்த்ததை பகிர்கின்றேன்********************************ஞாயிற்றுக் கிழமையும் பிறந்தது..ஞாயிறும் உதித்தது..காலைப் பொழுதில் வெளியில்... (கலா பாரதி)
20-Aug-2018 1:31 pm
பார்த்ததை பகிர்கின்றேன்
********************************
ஞாயிற்றுக் கிழமையும் பிறந்தது..
ஞாயிறும் உதித்தது..
காலைப் பொழுதில் வெளியில் புறப்பட்ட என் கணவரின் கண்ணில் தென்பட்டது
நெகிழி டப்பாவில் ( plastic jar ) சிக்கிய தலையோடு அலைமோதிய
நாய் ஒன்று..
பாவம் அந்த ஜீவன்
அங்கும் இங்கும் ஓடியது..
பாதை தெரியாமல் சுவற்றில் முட்டிக்கொண்டது..
சுவாசிக்க முடியாமல் திணறியது..
அதற்கு உதவி செய்ய நினைத்து
என் கணவரும் மற்றுமொரு நபரும்
ஒருவர் நாயை பற்றிக்கொள்ள..
ஒருவர் தலை பகுதியில் மாட்டிக்கொண்ட
டப்பாவை இழுக்க..
துடிதுடித்துப் போனது அந்த ஜீவன்..
இறுதி கட்டமாய் கத்தியின் துணையோடு மெதுமெதுவாய் அருத்தெறிந்தனர் தலையில் சிக்கிய டப்பாவை...
மரணபயம் தெளியாத முகத்தோடு சோர்ந்து நின்ற ஜீவனை தடவிக்கொடுத்து தண்ணீர் கொடுத்தேன் குடிக்கவில்லை..
ரொட்டித்துண்டை கொடுத்தேன் உண்ணவில்லை..
அதன் இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது..
சிறிது நேரம் கழித்து கொடுத்ததை
உண்டுவிட்டு சென்றுவிட்டது..
ஆறறிவு ஜீவன் செய்த தவறால்
ஐந்தறிவு ஜீவன் அகப்பட்டுவிட்டதே..
வெற்றிடம் கிடைத்தால்
வேண்டாததை எறிந்திடலாமோ..?
அக்கறையில்லா சிலரால்
அவதிப்படுபவர் யாரோ..?
விலங்காக பிறந்தாலும்
வலியும் வேதனையும் ஒன்றுதானே..
உடைந்த கண்ணாடி புட்டில்களையும்
பயன்படுத்திய கழிவுப் பஞ்சுகளையும்
எறிந்துவிடுவோம் குப்பையோடு குப்பையாய்..
ஆனால் அதை சுமந்துச் செல்பவன் குப்பைக்காரன் அல்ல..
நம் உடன்பிறவா சகோதரன் என்பதை நினைவில் கொள்வோம்..
பொறப்போடு நடப்போம்..
மனித நேயத்தோடு வாழ்வோம்..
சுதந்திர தினம் என் பார்வையில்****************************************சுதந்திர தின வாழ்த்தை எமக்கு... (கலா பாரதி)
15-Aug-2018 12:46 pm
சுதந்திர தினம் என் பார்வையில்
****************************************
சுதந்திர தின வாழ்த்தை எமக்கு பகிர்ந்த அனைவருக்கும் நன்றி..
சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று கொண்டாட மனம் வரவில்லை இன்று..
சுதந்திர தினமான இன்றும்
ஏதோ ஒரு மூலையில்
பெண் கற்பழிக்கப்பட்டிருப்பாள்..
ஏதோ ஒரு மூலையில்
குழந்தை கடத்தப்பட்டிருக்கும்..
இராணுவ பகுதியில் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர்..
இதை யாராலும் மறுக்க முடியுமா?
இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து
72 ஆண்டுகள் ஆயினும் நாட்டு மக்களுக்கு
இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவேயில்லை..
இன்றைய நாளில்
நம் தேசிய கொடிக்கு
மரியாதை செலுத்துவதற்கு முன் நம் நாட்டு விடுதலைக்காக போராடி உயிர்விட்ட தியாகிகளையும்,
நம் நாட்டை பாதுகாக்க எல்லையில்
போராடிக் கொண்டிருக்கும்
இராணுவ வீரர்களையும்
மண்டியிட்டு வணங்குகிறேன்..
ஜெய்ஹிந்த்
சுதந்திர தினம் என் பார்வையில்****************************************சுதந்திர தின வாழ்த்தை எமக்கு... (கலா பாரதி)
15-Aug-2018 12:37 pm
சுதந்திர தினம் என் பார்வையில்
****************************************
சுதந்திர தின வாழ்த்தை எமக்கு பகிர்ந்த அனைவருக்கும் நன்றி..
சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று கொண்டாட மனம் வரவில்லை இன்று..
சுதந்திர தினமான இன்றும்
ஏதோ ஒரு மூலையில்
பெண் கற்பழிக்கப்பட்டிருப்பாள்..
ஏதோ ஒரு மூலையில்
குழந்தை கடத்தப்பட்டிருக்கும்..
இராணுவ பகுதியில் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர்..
இதை யாராலும் மறுக்க முடியுமா?
இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து
72 ஆண்டுகள் ஆயினும் நாட்டு மக்களுக்கு
இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவேயில்லை..
இன்றைய நாளில்
நம் தேசிய கொடிக்கு
மரியாதை செலுத்துவதற்கு முன் நம் நாட்டு விடுதலைக்காக போராடி உயிர்விட்ட தியாகிகளையும்,
நம் நாட்டை பாதுகாக்க எல்லையில்
போராடிக் கொண்டிருக்கும்
இராணுவ வீரர்களையும்
மண்டியிட்டு வணங்குகிறேன்..
ஜெய்ஹிந்த்