கர்ப்பிணியின் கடிதம்

என்னுள் பூத்த முத்தே..
உனக்கு அன்னை நான் எழுதியக் கடிதம் படிக்கின்றேன்
கொஞ்சம் செவி கொடுத்துக் கேளாயோ!

உன் செவ்விதழ் பூக்கும் புன்சிரிப்பை
புன்னகையோடு நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?

உன் திராட்சைக் கண்களை
நீ உருட்டி தேடும் காட்சியை
நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?

உன் பிஞ்சுக் கால்களை
நான் வருட...
உன் சின்ன குரலில் நீ சிணுங்கும்
சிணுங்களை ரசிக்க காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?

உன் ஆசைப் பொருளை
எடுக்க
நீ தத்தித் தவழ்வதை
நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?

உன் குட்டிக் கைகளை நான் பிடிக்க..
எனைபற்றிக் கொண்டு நீ நடக்க..
உன் அழகு நடையை நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?

உன் இருவிழிகளில் மையிட்டு
நெற்றி நடுவில் பொட்டுவைத்து
உன் வட்ட முகத்தை நான் ரசிக்க
காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாயோ?

நீ ஆணோ.. பெண்ணோ.. யாராயினும்
என் அகமகிழ்ந்து உனை
அரவணைப்பேன்
அச்சம் வேண்டாம்
என் உயிரே!

எழுதியவர் : கலா பாரதி (3-Feb-18, 1:07 pm)
பார்வை : 116

மேலே