என்ன தவம் செய்தேன் --- முஹம்மத் ஸர்பான்
கருவறை வெளிச்சங்கள்
அன்னையின் காயங்கள்
சுவாசிக்கும் இதயங்கள்
அன்னையின் பிச்சைகள்
மாரூட்டும் அன்னங்கள்
அன்னையின் உதிரங்கள்
கண்களின் தியாகங்கள்
அன்னையின் பாசங்கள்
கண்ணீரின் அர்த்தங்கள்
அன்னையின் கவிதைகள்
இறைவனின் தானங்கள்
அன்னையின் பிரவசங்கள்
என்ன தவம் செய்தேன்
என்னுள்ளம் கேட்கிறது
பூக்களை நான் தொட
முட்களைப் பற்றினாள்
கிறுக்கன் போல் ஓடிட
நிழல்கள் வரைந்தாள்
கவிஞன் போல் மாறிட
தமிழ் மொழி தந்தாள்
அறிஞன் போல் ஊறிட
கை பிடித்து நின்றாள்
உன்னையே நேசித்தேன்
வேதத்தை வாசித்தேன்
என்னையே தேடினேன்
அன்னையை கண்டேன்
கழிவுகளை அள்ளினாள்
முத்தங்கள் குவித்தாள்
மரணத்தை அறிந்தும்
தொப்புள்கொடி சுமந்தாள்
என்ன தவம் செய்தேன்
என்னுள்ளம் கேட்கிறது