ஒரு பெண் பார்க்கும் படலம்
ஒரு பெண் பார்க்கும் படலம்
_____________________________________
குடு குடு வென்று
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடினாய்.
அப்போதும்
ஏதோ பேசினாயே.
பிற்கு அந்த சன்னல்
பக்கம்
உன் அத்தைமார் என்று
உறவினர்களோடு
ஒட்டிக்கொண்டாய்.
அதன் பின்
என்னை நோக்கி வந்தாய்
என்று
நான் முகம் நீட்டி
முறுவலித்தேன்.
என்ன..
அந்த 0.0001 கோணத்தில்
ஒரு ஓரப்பார்வையை மட்டும்
மின்னலாக்கி விட்டு
என்னருகே இருந்த
அந்த ஆச்சிகளோடு
கலகலத்தாய்.
அங்கும் இங்கும்
சிறகு முளைத்துகொண்டு
சிணுங்கிக்கொண்டு
வண்ணச்சீறடி
வடிவம் காட்டாமலேயே
கால் தட சுவடுகளைக்கொண்டு
இனிய தாளங்கள் இட்டாய்
என் இத்யம் இப்போது
சுக்கு நூறு தான்.
ஆனாலும் உன் மெல்லொலிகள்
என் நரம்புகளை
மீட்டிக்கொண்டே இருந்தது.
பின்னணியில்
அது என்ன அந்த இனிய உன்
பேச்சுக்குரல்கள்..
உன் கைகள் குலுங்கின.
இன்னொலியுடன்.
என்னவோ நீ பேசுகிறாயோ?
இது வரை
உன் வளையல்கலைக்கொண்டா
பேசிக்கொண்டிருந்தாய்?
____________________________________________