அன்புள்ள அம்மா
பல கோடி உயிர்கள் மத்தியில்
எனக்கு மட்டும் உன்னுள் இடம் தந்தவளே!
நான் சுமையாக உனக்கு இருந்தபோதும்
என்னை சுகமாக சுமந்தவளே!
புது உலகை
நான் காண வலிகளோடு உனை வருத்தி எனக்கு வழிவிட்டவளே!
இரவும் பகலும் பாராமல் உன் மாரோடு எனை ஒளித்து வைத்து
உன் இரத்தத்தை பாலாக்கித் தந்தவளே!
பல இன்னல்கள் நான் உனக்கு தந்த போதும் இன்முகத்தோடு என்னை அணைத்தவளே!
திசை நான்கும் என் புகழ்பாட நல்லொழுக்கத்தை
கற்றுத்தந்தவளே!
என்ன தவம் செய்தேனோ
அன்னையாக உன்னைப் பெற்றதற்கு!
ஏழு ஜென்மம் எடுத்தாலும் என் அன்னையாக நீயே வேண்டும்..
வருவாயா?