அம்மாவின் அன்பு மகன்

நிலாவைக் காட்டி சோறு ஊட்டினாய்
நித்தம் நித்தம் கதைகள் பல வடித்தாய்
பேய் என்றும் பூதம் என்றும் பொய் சொன்னாய்

தான் உன்ன உணவில்லை எனினும் எனக்காக ஒதுக்கி வைத்தாய்

எத்தனையோ கடன்களுக்கு மத்தியில் தான் கல்லூரியில் கரை சேர்த்தாய்.
கல்லூரி நாட்களில் காதல் என்று கவிதைகள் பல வடித்து தெரிந்தேன்.
வாழ்வில் வறுமையின் வழி தெரியாமலே என்னை வளர்த்தெடுத்தாய்

ஊதாரி பையன் என்று ஊரார் கூரையில் நீ நல்லவன் டா என நீ மட்டும் தான் மறுமொழி உரைத்தாய்

உள்ளூர் தேர்தலில் ஒரு சாரருக்காக உழைத்தேன் மறுமுனை காரரின் வாய் சொல்லின் வன்ம வார்த்தைகள் உன்னை காயப்படுத்தியது.

ஏண்டா இந்த ஊர் வம்பு
என்னும் வார்த்தையின் இடையில் இரு சொட்டுக் கண்ணீர் துளிகள் .
வாய் சொற்களின் வன்மத்தையும் வயதின் இளமையையும் வறுமையின் வலியையும் எனக்கு உணர்த்தியது

பொருள் தேடி புறவுலகம் புறப்பட்டேன்

நாடு விட்டு நாடு தான்டி கண்டங்களும் பல தாண்டி காயங்கள் பல கண்டேன் பனம் என்ற ஒற்றை காகிதத்திர்க்காக

நீயோ எனக்கு மாமன் மகளை மணமுடிக்க என்னினாய் அவளோ தான் அயலோர் ஒருவனை காதலிப்பதாய் கடைசி நிமிடத்தில் காதருகில் ரகசியித்தால்
என்னுல் கூவும் குயிலின் ஓசை அடங்கி அன்னம் மறந்து உறக்கம் கலைந்து பித்துக்குளி ஆனேன்

தாயே உன்னை போல் என்னை இன்னும் குழந்தையாய் என்னும் மங்கை மாந்தருள் எங்கோ பிரசிவித்திருப்பால் என்ற எண்ணத்தில் வருங்காலத்தின் வருகையை எதிர்நோக்கி கவிதையின் கடைசி நிமிடங்களில் இந்த வாழ்க்கையை இறைவனிடம் ஒப்புவிக்கிறேன்.

எழுதியவர் : (6-Feb-18, 6:03 am)
Tanglish : ammaavin anbu magan
பார்வை : 282

மேலே