உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்கு - ஆசாரக் கோவை 20
இன்னிசை வெண்பா
உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் ...கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ யாண்டும்
பிறிதியாது நோக்கா னுரையான் தொழுதுகொண்
டுண்க உகாஅமை நன்கு!. 20
- ஆசாரக்கோவை
பொருளுரை:
ஒருவன் உண்ணும்பொழுது கிழக்கு திசை பார்த்து அமர்ந்து தூங்காமல், அசைந்தாடாமல் நன்றாக இருந்து எவ்விடத்தும் வேறொன்றனையும் பார்க்காமல், வேறொன்றும் பேசாமல் உண்கின்ற உணவைத் தொழுது கையாலெடுத்து சிந்தாமல் நன்கு உண்ண வேண்டும்.
கருத்துரை:
கிழக்கு மங்கலத் திசையாதலின் உணவு உண்பவன் கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கருத்துடையவனாக உண்ணவேண்டும்.