வரதட்ச்சனை

வராத தலைவலியும்
வந்துசேரும்
வரதட்சனை என்ற
வார்த்தையை கேட்டால்
பெண்ணை பெற்றவர்களுக்கு...

தன் தவத்தால்
கிடைத்த வரமாய்
பெற்ற மகளை
தாரைவார்த்து கொடுக்க
தரவேண்டுமாம்
சீதனம்...

படித்தவள்
பண்புள்ளவள்
பார்க்க அழகானவள்
இவை இருந்தபோதும்
புன்னகைக்கும் பெண்ணுக்கு மதிப்பில்லை பொன்நகை இல்லையெனில் புகுந்த வீட்டில்...

பிறந்த வீட்டை பிரிந்து
புதுமுகத்தவனோடு வாழ்ந்து
புத்துயிரை சுமந்து
பிரசவத்தில் உயிர்த்தெழுந்து
வாழும்வரை சார்ந்தவர்க்கு
சேவை செய்யும் பெண்ணுக்கு
எங்கே சீதனம்?

தரமுடியுமா?

பெட்டிக்குள் பூட்டிவைக்கும்
பொன்னைவிட
பெண்ணே உயர்ந்தவள்.

வம்சத்தை வாழவைப்பது
பணமில்லை
பெண்ணின் குணம்.

எழுதியவர் : கலா பாரதி (4-Jul-17, 3:51 pm)
சேர்த்தது : கலா பாரதி
பார்வை : 100

மேலே