அவளின் பிறந்தநாள்

அன்பே அன்று உன் பிறந்தநாள்

குயில்கள் பாட மறந்தன
மயில்கள் ஆட மறந்தன
ரயில்கள் ஓட மறந்தன
ஜெயில்கள் மூட மறந்தன
வெயில்கள் சூட மறந்தன
மெயில்கள் தேட மறந்தன
முயல்கள் வாட மறந்தன
புயல்கள் கூட மறந்தன

ஏனென்றால் உன் பிறந்தநாள்

அன்று பூக்கள் பிறக்கவில்லை
ஈக்கள் பறக்கவில்லை
பாக்கள் சிறக்கவில்லை
மாக்கள் கறக்கவில்லை

ஏனென்றால் உன்
பிறந்தநாள்

தலாய்லாமா இறக்கும்
கணம் பிறக்கும் குழந்தையே அடுத்த தலாய்லாமா ஆகிறது திபத்தில்
நீ பிறந்த கணம் எந்த உலக அழகி இறந்தாலோ விபத்தில்

நீ ஒரு பூவுக்குப் பிறந்தவள் தலையில் பூ வைக்க பிறந்தவள்

எல்லோரும் பூக்களைச் சூடிக்கொள்ள விரும்புகையில்
அந்தப் பூ மட்டும் பூவையே உன்னைச் சூடிக்கொள்ள
விரும்பியது


நிலவில் வடை சுடுகிறாள் ஒரு ஆயா
நான் சொல்லவில்லை நாசா விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
அந்த ஆயா தான் உன் அன்னைக்கு இருந்திருக்க வேண்டும் தாயா

நீ கண் திறந்து பார்த்தாய் நான் குருடனாய் உறைந்தேன்
நீ கண்மூடி நின்றாய்
குரூடாயிலாய் கரைந்தேன்

எழுதியவர் : குமார் (8-Sep-25, 2:23 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : avalin piranthanaal
பார்வை : 16

மேலே