எம் தாய் மொழியாம் தமிழ் மொழி
தமிழே..
தாய் மொழியே...
அனைத்து மொழிகளுக்கும்
ஆதியும் நீயே..
அழகிய தமிழே..
அழியா மொழியே..
அமுதமும் நீயே..
தித்திக்கும் தேனே..
திகட்டாத சுவையே..
செந்தமிழும் நீயே..
அர்த்தமுள்ள சொற்களை
அள்ளிக் கொடுக்கும்
அற்புத மொழியே..
மழலை பேசும்
கொஞ்சு தமிழும் நீயே..
படைகள் முழங்கும்
வீரத்தமிழும் நீயே..
கவிஞன் பாடும்
காதல் தமிழும் நீயே..
காலம் போற்றும்
சங்கத் தமிழும் நீயே..
தமிழே மொழியே..
அழியா ஒளியே..
உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்.