கருவின் குரல் − 2

உன் மூச்சுக் காற்றை
நானும் சுவாசிக்கிறேன்..

உன் இரத்தம் உறுஞ்சி
நானும் வளர்கிறேன்..

நீ பேசும் வார்த்தைகளை
நானும் கேட்கிறேன்..

நீ பார்க்கும் அத்தனையும்
நானும் உணர்கிறேன்..

உன் மகிழ்ச்சியே
எனக்கு உற்சாகம்..

உன் சோகமே
எனக்கு சோர்வு..

உன் வளையல் ஓசை
எனக்கு இனிமையான இசை..

உன் சிந்தனை யாவும்
என் சிந்தையிலும் ஊறும்..

அம்மா..
நீ நலமாக வாழ்ந்துவிடு..
என்னை நலமுடன் பெற்று எடு..

எழுதியவர் : கலா பாரதி (1-Sep-18, 8:23 am)
சேர்த்தது : கலா பாரதி
பார்வை : 28

மேலே