தமிழ் செத்து மாயும்

தமிழ் செத்து மாயும்

உணர்வுகளை தாண்டி
உயிரோடு ஊடுருவிய தீண்டலை- சதைகளின்
புணர்வுகளுக்காக
சந்தைபடுத்திய வியாபாரிகளை
சமூகம் ஏற்றுகொண்டது
இந்த யுகத்தின் இணையிலா கவிஞர்கள் என்று

தன்னை உருக்கி தன்னுள் தான் மூழ்கி
என்றைக்கும் ஒளிரும் கவிதைகளை
தரம் தாழ்த்தி தனக்குதானே முடி சூட்டி கொண்டது
தரம்கெட்ட கூக்குரல்கள்
தரணியின் கவிதைகள் என

பாரதி நீ இன்னொரு முறை பிறந்து வா
பாரதிர உன் பா ரதம் செலுத்தி வா
சீர்கெட்ட சிணுங்கல்கள்
சீ பட்டு இந்த மண்ணுக்குள் மாயட்டும்
செந்தமிழ் செகத்தில் தலை நிமிர்ந்து நிற்கட்டும்

பொற்கிழிகளை பெருமைக்கு
விற்கும் புரவலர் கூட்டமே
நற்றமிழ் கவிதைகள் புலப்படவே இல்லையா
நலிந்தும் தமிழ் பணியாற்றும்
நற்றமிழ் பாவலர் கூட்டம் தென்படவே இல்லையா

மெல்ல தமிழ் இனி சாகும் என்ற நிலை மாறி
வேகமாய் தமிழ் செத்து மாயும்
உறக்கம் கலைய உணர்வுடன் வீறு கொள்ள
புறப்பட்டு தட்டி எழுப்புவோம் தமிழரை
தாரணி ஆளும் புதுமைகள் செய்வோம்

ச ரவிச்சந்திரன் ஆங்கில விரிவுரையாளர்
2 Shares

எழுதியவர் : S Ravichandran (1-Sep-18, 10:14 am)
பார்வை : 52

மேலே