ச இரவிச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ச இரவிச்சந்திரன்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  18-Jul-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2016
பார்த்தவர்கள்:  429
புள்ளி:  81

என்னைப் பற்றி...

என் பெயர் ச ரவிச்சந்திரன் த/பெ கி சங்கரநாராயணன் பிறந்த ஊர் rnதஞ்சாவூர் கரந்தட்டாங்குடி பிறந்த வருடம் 1964 நான் பொருளியலில் முதுகலை பட்டம் 1999 இல் பெற்றேன் இளநிலை முனைவர் பட்டமும் பொருளியலில் பெற்றுள்ளேன் . அத்தோடு ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும் முனைவர் ஆய்வில் உள்ளேன் rnநான் 1988 மே மாதம் முதல் 2013 டிசம்பர் மாதம் வரை தமிழக காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி விருப்ப ஓய்வில் சென்று விட்டேன் rn தற்போது காஞ்சிபுரம் நகரில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கில மொழியை தனி வகுப்புகள் மூலம் கற்பித்து வருகிறேன் rn தமிழிலும் பல்வேறு கவிதைகள் எழுதி வருகிறேன் நற்றினை தொல்காப்பியம் அகம் புறம் ஆகியவற்றறை படித்து வருகிறேன் rnஆங்கிலத்தில் ஏறத்தாழ 240 கவிதைகளும் 55 சிறு கட்டுரைகளும் எழுதியுள்ளேன் . இவையாவும் பல்வேறு சர்வதேச இனைய தளங்களில் rnவெளியாகியுள்ளது rnrnதமிழில் எழுத்து .காம் என் எழுத்துகளை வெளியிட்டு சிறப்பித்து உள்ளது rnrnrnrn

என் படைப்புகள்
ச இரவிச்சந்திரன் செய்திகள்
ச இரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2019 8:31 am

எரிகிறது என்றோ
எவரோ பற்ற வைத்தது
எரிகிறது இன்று வரை எரிகிறது
தானும் தன்குடும்பமும்
தாரணி ஆளவேண்டும் என்ற
தன்னலத்துடன் பற்றவைத்த
தணல் இன்று தாரணி முழுதும்
கொழுந்துவிட்டு எரிகிறது

மேலும்

ச இரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2019 12:31 pm

ஒன்பது ஓட்டை தேகம்
ஒரு நாள் தீயில் வேகும்.
இன்பம் எல்லாம் பொய்யே!
இம்மையின் தோற்றபிழையே!
வெளியே போகும் மூச்சு
உள்ளே வராம போனால் போச்சு
அசையும் தேகம் பிணமே !
அழுகி நாறிச் சீதையும்

இருக்கும் வரையில் ஆடும்
வெறுப்பெனும் நெருப்பை கொட்டும்
கருவறுப்பேன் என்று உறுமும்
காற்று போன பின்போ
கல்லறை தேடி ஓடும்

அரசன் ஆண்டியென்றே
அங்கங்கு கூவி திரியும்
அடங்கிய பின்போ அவைகள்
முடங்கி பாடையில் ஏறும்

ஒரு சட்டி தீயில் எரியும்-- ஒரு
கைப்பிடி சாம்பலாய் மாறும்
ஓடும் நதியில் கடலில் கரையும்
ஒன்றுமில்லாமல் ஆகும்

பிறந்து வளர்ந்து அழியும்
பிணக்காம்------ நமக்குள்
எத்தனை எத்தனை அவலம்!
என்றிவை

மேலும்

ச இரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2019 12:27 pm

கருப்பை சுமந்த ஒரு கைபிண்டம்
தெருவில் நடக்கும் பெண்டீர் பின்போய்
மருவத் துடித்து மாண்பை இழக்கும்.
உருவம் குறுகி யுதிரம் வற்றி,
பருவம் தொலைத்து பாழில் வீழும்

கோபம் காமம் பொய் எனும் பேய்களை
தாபத்துடன் தரணியில் மருவி
பாவம் வறுமை பிணிபல தாங்கி
யாவுமிழந்த நடை பிணமாய் உலவும்

இறையை மறுத்து நன்னயம் இழந்து
மறையை ஒதுக்கி மனிதம் தொலைத்து
நரையில் வீழ்ந்து நடுக்கம் கொண்டே
நரகில் வீழும் பாழும் மனிதா

பெண்மையே சக்தி ! பெண்மையே தெய்வம் !
பெண்மையே வையம்! பெண்மையே யாவும் !
பெண்மையை சிதைத்து சிதையும் பிணங்காள்!
பெண்மையை இன்றி ஏதும் இல்லை.

சுகித்தற்கு மட்டுமா பெண்மையை இங்கே
சுத்த பிரம்மம்

மேலும்

ச இரவிச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2019 12:25 pm

நேர்மையின் வழியில் சென்றவர்கள்
சீர்மிகு மானுடம் போற்றிச்
சொன்னவர்கள்
ஆண்மை போற்றி பெண்மை
காத்தவர்கள்
மாண்புடன் தேசத்தை காத்தவர்கள்
லஞ்சத்தை நஞ்சாய் நினைத்தவர்கள்
வஞ்சத்தை அறியா நல்லவர்கள்
மொழியால் வெறுப்பை பரப்பாமல்
மொழியால் உறவை வளர்த்தவர்கள்
அரசியல் வழியே சுரண்டாமல்
அரசை அறமாய் நினைத்தவர்கள்
சாதியின் வழியே சண்டை வர
சாவே வரினும் மறுத்தவர்கள்
இவர்கள் எங்கே போனானர்கள்
அவனியில் அறிவோர் உள்ளனரோ?

மேலும்

ச இரவிச்சந்திரன் - கி கவியரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2017 12:24 pm

இது இளைஞர்கள் அரசியலுக்கு வர சரியான தருணமா? அப்படி இளைஞர்கள் முன்வந்தால் ஆதரிக்க நீங்கள் தயாரா ?

மேலும்

கண்டிப்பாக ஆதரிப்போம் ஆனால் பலரின் பயம் அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவ அறிவு இல்லாமல் இருக்கும் என்பது தான் ஆகவே ஒரு நல்ல பக்க பலம் இருப்பின் மிக நல்லது என்பது என் கருது. எனறும் தங்கள் வருகை நல்ல வரவே.... வரவேற்கிறோம்.... ஏழுந்து நில்லடா தமிழா தலை நிமிர்ந்து நில்லடா 27-Mar-2017 8:24 pm
அருமையான தருணம் ..,இளைஞர்களே ..! எழுச்சியின் துவக்கம் ....,அடிப்படை சரித்திரம் .., 04-Feb-2017 12:08 am
சரியான தருணம் என்று எதுவுமே கிடையாது. அவேசமாக முடிவெடுத்து நாம் இந்த புத்தியற்ற அரசியல் கூட்டத்தில் ஒரு முறை பட்டது போதாது என்கிறீர்களா.?. இப்பொழுது இவர்கள் செய்யும் அரசியல் வழியே நாமும் போக வேண்டிய நிலை என்றால், அது நமக்கு தேவையில்லை. உண்மையில் அரசியல் என்றால் என்ன? மக்கள் நலனுக்காக ஒரு உண்மையான தலைவன் வேண்டும். 60 வருடங்களாக ஒரே ஒரு காமராசரை மட்டும் தான் நம்மால் பார்க்க முடிந்தது. அவரைப் போல் இவர் இல்லை, இவரைப் போல அவர் இல்லை என்று தற்போது இருக்கும் அரசியல் கட்சிகள் செய்து வரும் அரசியல் தான் நாமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் நம்மை வைத்து அரசியல் செய்கிறார்கள். அடிப்படை அறிவும் அறியாத அவர்களால் இதை செய்து காட்டுவது சாத்தியம் என்றால் நம்மாலும் முடியும். இனி நாம் அவர்களை வைத்து அரசியல் செய்வோம். கட்சி ஆரம்பித்து சின்னம் வாங்கி தேர்தலில் நின்று வென்று ஆட்சியில் அமர்ந்தால் தான் அரசியல் வாதியாக மாற முடியும் என்று அர்த்தம் இல்லை. இங்கு இருந்தே அங்கு ஆட்டிவைப்பதும் அரசியல் தான். மக்களிடம் இனியும் கட்சியின் பெயரை வைத்து கொண்டு ஏமாற்றும் கயவர்களை நம்பக் கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மக்கள் விரும்பிய தலைவர்கள் போல் தற்போது இங்கு யாரும் இல்லை என்பதை உணர செய்வோம். முன் போல் அரசியல் தலைவர்கள் யாரும் மக்களின் வாழ்க்கை, உணர்வு, நிலைமை என எதையும் நேரில் பார்த்து அவர்களது தேவையை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் நல்ல தலைவர்கள் யாரும் இப்போது இல்லை. இளைஞர்கள் நாம் மக்களோடு கலந்து இருக்கிறோம். நாம் செய்ய நினைப்பதை நேரடியாகவே செய்து முடிக்கலாம். இப்பொழுது சொல்லுங்கள் அரசியல் நமக்கு தேவையா??? 02-Feb-2017 3:32 pm
நல்லது ஆனால் அனைத்து தமிழக மக்கள் பலமும் இளைஞர் பக்கமே சார வேண்டும் 28-Jan-2017 11:52 am
ச இரவிச்சந்திரன் - ச இரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 7:45 pm

  தமிழக வாக்காளர் விழிப்புணர்வுப் பேரவைஇது ஒரு தன்னார்வ அமைப்பு இதில் எல்லா வாக்காளர்களும் பங்கு பெறலாம் . இதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் யாவும் வாக்காளர்கள் யாவரும் நலம் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த அமைப்பு 
செயல்படும் இதில் யாருடைய கருத்துக்கள் வேண்டுமானாலும் விவாதிக்கப்படலாம் இதன் நோக்கம் வாக்காளர்களின் நலன் ஒன்றேஇதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் 
1] வேட்பாளர்கள் என்பவர் யார் ? 2]வேட்பாளர்களின் கடமைகள் [3] வேட்பாளர்களின் பொறுப்புகள் 
[4] வேட்பாளர்களின் இயல்புகள் M L A , M P ஆகும் முன் ,ஆன பின் இவர்கள் வாக்காளர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் [5] இவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கு எந்த அளவுக்கு கடமை பட்டவர்கள் ? [6] தொகுதி வாக்காளர்களுக்கு எந்த அளவுக்கு கடமை பட்டவர்கள் போன்ற விபரங்கள் இந்த பகுதியில் விவாதிக்கப்படும்இந்த பகுதியின் முக்கிய நோக்கமே வாக்களர்களின் விழிப்புணர்வு மட்டுமே  

மேலும்

ச இரவிச்சந்திரன் - ஆ க முருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2017 1:54 am

தமிழனின் வீர, பண்பாட்டு நிகழ்வான ஏறுதழுவுதலை தடை செய்து, தமிழனை மல்லுக்கட்ட வைத்த காரண மற்றும் காரணிகள் என்ன?

மேலும்

தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.. 27-Jan-2017 9:12 am
நிச்சயம் தெரியப்படுத்தவேண்டும். நம் கடமையும் கூட. 27-Jan-2017 9:09 am
மனித உருவில் நடமாடும் அரக்கர்களா இவர்கள், அப்படி என்றால் உடனடியாக ஒடுக்கப்பட்ட வேண்டும், இயற்கை விவசாயத்த்தோடு முடிந்த வரை நம் நாட்டு தயாரிப்புக்களையே பயன் படுத்த வேண்டும், நன்றி - மு.ரா. 22-Jan-2017 6:11 am
விவசாயிகளுக்கு இதையெல்லாம் புரிய வைக்கவேண்டும். 22-Jan-2017 2:19 am
ச இரவிச்சந்திரன் - சிவநாதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2016 7:35 pm

"சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மையா? இந் நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்கள் அபிப்பிராயங்களை அறிய விரும்புகிறேன்.

மேலும்

உண்மை நண்பரே உங்கள் ஆதங்கம் நியாயமானது..நீங்கள் கூறியதில் தப்பில்லை.. இந்து நிகழ்ச்சி =இந்த நிகழ்ச்சி 07-Sep-2016 6:54 pm
தொலைக்காட்சி டீ.ர்.பி உயர்த்து வதற்காக இப்படி எல்ல ; இந்து நிகழ்ச்சி எல்லா அனைவர் முன் தேவையா ? தனி பட்ட விசயத்தைக்கூட ஒரே பார்க்கும் படி செய்வது முறையா ? நீதி சொல்ல அவங்க யாரு ?....... அவங்க என்ன நீதிபதியை விட,, பெரிய நபர் அல்ல........ இதுவே ஏன் கருத்து .....................இதுல--தப்பு இருந்த மன்னிக்கவும்..................... 07-Sep-2016 3:04 pm
அப்படியா?? கருத்துக்கு நன்றி நண்பரே . 07-Sep-2016 2:32 am
உண்மைதான்.... நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கு தங்கள் வர்த்தக நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடாத்தும் மேற்படி நிறுவனம் கல்வியிலும் வசதியிலும் சமூக அந்தஸ்திலும் பின் தங்கி இருக்கும்அப்பாவி மக்களின் குடும்பங்களில் உள்ள அந்தரங்க கதைகளை பொது வெளியில் பகிர்ந்து கொள்கிறார்கள்...இது போன்ற சம்பவங்கள் பிரபலமான நடிகைகள் நடிகர்கள் பெரிய தொழிலதிபர்கள் வீடுகளில் நடப்பதில்லையா?? நீதி வேண்டும் என்றுநல்ல மனதோடு இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பெரிய இடத்துப் பிரச்சனைகளையும் பொது வெளிக்கு கொண்டு வரலாமே?? ஏன் கீழ் நிலையில் இருக்கும் மக்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்? காணொளி வடிவில் கொடுக்கும் இந்த வாக்கு மூலங்கள் இந்த அப்பாவிக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் அவமானத்திற்கு உள்ளாக்கும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள்..இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு வேண்டும்..நீங்கள் கூறுவது போன்று இவ்வாறான நிகழ்ச்சிகள் தடை செய்யப் படவேண்டும். 07-Sep-2016 2:30 am
ச இரவிச்சந்திரன் - ச இரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2016 7:14 pm

இந்திய கிரிகெட் அணியை  தோற்கடித்த  மாபெரும் வீரர்கள் 
இந்திய கிரிகெட் அணியை  ஆஸ்திரேலியா  தோற்கடிக்க வில்லை  இந்திய அணியின்  பின்வரிசை வீரர்களே  all rounder என்ற பெரிய பெயருடன் விளையாடும்  வீரர்களும்  மோசமான பந்து வீச்சை வெளிபடுத்திய  பந்து வீச்சாளர்களுமே  தோற்கடித்தனர் . ரவீந்திர ஜடேஜா  எப்படிப்பட்ட ஆல் ரௌண்டெர்  வெற்றி வாய்ப்பை  மட்டை போட்டு  மட்டை போட்டு  வெற்றியாய் ஆஸ்திரேலிய  வீரர்களுக்கு  தாரை வார்த்த  மிக சிறந்த  ஆல் ரௌண்டெர்  வெற்றி தோல்வி சகஜம் தான்  ஆனால் தொடர் முழுவதும் தோல்வி என்பது தான்  ஏற்க்கமுடியாததாக  உள்ளது    மகேந்திர சிங் டோனி அணியின் தலைவர் என்ற முறையில்  மிக சிறப்பான  ஆட்டத்தை  வெளிபடுத்த வேண்டிய நேரத்தில்  பொறுப்பற்ற முறையில்  ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து ஆட்டத்தின் போக்கை  எதிரணி வீரர்களுக்கு  சாதகமாக்கினார்  என்றால்  மிகை இல்லை .  புதிய வீரர்களுக்கு வாய்ப்பு  தரவேண்டியது தான்  ஆனால் எங்கே என்ற விவஸ்தை இல்லாமல் முக்கியமான ஆட்டங்களிலா   உள்ளே நுழைப்பது  இதனால் இந்திய அணி  ஈட்டி வைத்திருந்த  நற்பெயர் தானே  பலியானது இளம் வீரர்கள்  மிக மோசமாக விளையாடி  இந்திய அணியின் படு தோல்விக்கு காரணமாகினர் 
    நான்கு  வீரர்கள் தலையில் தான் இந்திய அணியின்  சுமை முழுவதும் இறக்கப்பட்டுள்ளது  அவர்கள்  ரோஹித் சர்மா  , சிகார்  தவான் . விராத் கோலி மற்றும் அஜின்க்யா  ரஹானே  இவர்கள் தவிர யாருமே இந்த தொடரில் சரியான ஆட்டத்தை  வெளிபடுத்தவில்லை  எஞ்சிய மோசமாக விளையாடும்  வீரர்களை  ஒரு தின சர்வதேச போட்டிகளில் இருந்து  சிறிது காலம் நீக்கி  இவர்களுக்கு   இந்தியாவிற்குள்  ஆடும் ஆட்டங்களான  ரஞ்சி கோப்பை  புச்சி பாபு  போன்ற ஆட்டங்களில் இடம் பெற செய்து  பயிற்சி அளித்து  இவர்கள் திறனை  பரிசோதனை செய்த பின்  இவர்களுக்கு  ஒரு தின சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு அளிக்கலாம்   தேர்வு  குழு  அணி வீரர்களை தேர்வு செய்யும்  போது   மாவட்டங்களில்   மாநிலங்களில்  ர இருந்து இளம்  வீரர்களை  ஓபன் செலக்ஷன்  மூலம்  மாவட்ட   மாநில  அசொசியேஷன்  மூலம்  தேர்வு செய்து கொள்ளலாம்    இந்திய அணி குறைந்த பட்சம் மூன்று அணிகளையாவது  கை வசம் வைத்து கொண்டு களத்தில்  இறங்க வேண்டும்   தேசிய அணி  குறைந்த பட்சம்  மூன்று அணிகலாவது இருக்க வேண்டும்  ஒரு அணி  மிக மோசமாக விளையாடும் போது   அடுத்த அணியை இறக்க தயங்கவே கூடாது    இவர்கள் இந்திய அணி என்ற பெயரில் ஆடுவதால்  தான் இந்த  வேகமும் கோபமும்  இந்த கோபமும்  வேகமும் ஒவ்வொரு இந்தியனுக்கும்  இன்றைய  மோசமான ஆட்டத்தை பார்க்கும் போது  ஏற்பட்ட ஒன்று   இந்திய  அணியின்  வீரகளை தேர்வு செய்வதை  இந்திய அரசு பொறுப்பேற்று  கொள்ளவேண்டும் BCCI  யின் செயல் பாடுகளை  இந்திய  அரசு  கட்டு படுத்தவேண்டும் இந்திய விளையாட்டுத்துறையின்  மேற்பார்வையில்  செயல் படுத்த வேண்டும்   பொறுப்பற்ற முறையில் விளையாடும் வீரர்களை  பாரபட்சம் பார்க்காமல்  அணியை  நீக்க வேண்டும்   அப்போதுதான்  இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க முடியும்  இல்லையேல்  இப்படியே ஒவ்வொரு தோல்விக்கும் அணி தலைவர் கூறும்   சமாதானங்களை  கேட்டு   உச்  தான்  கொட்டமுடியும் 

மேலும்

அரசு பேருந்துகளின் அலட்சியம் , இன்று 08/01/2016 மாலை 4.30 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நான் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு போக்குவரத்து பேருந்து தடம் எண் 157 பதிவு எண் TN 23N 2301 என்ற பேருந்து C V R தெரு வில் சிவாஸ் ஹோட்டல் எதிரில் நட்ட நடு சாலையில் நிறுத்தி பயணியை ஏற்றிக்கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு செய்ததுமின்றி பின்னல் வந்த எனது இருசக்கர வாகனத்தை நிலைகுலைய செய்தது இதே தவறை இதே நேரத்தில் இதே இடத்தில் T 7 காஞ்சிபுரம் TO நெற்குன்றம் செல்லும் நகர பேருந்தும் செய்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருந்தது ஏராளமான சின்னஞ்சிறு மாணவர்களின் உயிரோடும் அலட்சியமாக வ்ளையாடுகிறது அரசு பேருந்துகள் என்றால் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம் எப்படி வேண்டு வேண்டுமானாலும் பயணிகளை ஏற்றிகொள்ளலாம் என்று ஏதேனும் சிறப்பு உரிமை வழங்கப்படிருக்கிறதா என தெரிய வில்லை தயவு செய்து தெளிவு படுத்தவும் இது பயணிகள் மற்றும் சாலையில் பயணிப்பவர்கள் உயிரோடு தொடர்புடைய விஷயம் என்பதால் தங்கள் மேலான கவனத்திற்கும் தக்க நடவடிக்கைக்கும் இதனை கொண்டு வருகிறேன் தயவு செய்து நடவடிக்கை எடுத்ததன் விபரம் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்க தாழ்மையுடன் கோருகிறேன் நன்றி தங்கள் உண்மையுள்ள ச ரவிச்சந்திரன் சமுக ஆர்வலர் 22-Jan-2016 5:35 am
அரசும் அரசியல் வாதிகளும் காவல் துறையினரை ஒதுக்குவது ஏன் ஊரில் பிரச்சினையா கூப்பிடு போலிசை , தெருவில் பிரச்சினையா கூப்பிடு போலிசை, திருடன் வீட்டில் வந்துவிட்டானா கூப்பிடு போலிசை அரசியல் மீட்டிங்கா கூப்பிடு போலிசை , மந்திரி வர்ராரா கூப்பிடு போலிசை ரோடு முழுதும் நிறுத்துவோம் ஆனால் வெள்ள நிவாரணமா போலீஸ் குடும்பங்களுக்கு கிடையாது இப்படி ஒவ்வொரு தேவைக்கும் போலிசை கூப்பிடும் நாம் அரசின் சலுகைகள் வெல்ல நிவாரணம் என்று வரும்போது இவர்களை ஏன் ஒதுக்கினோம் ? யாரவது சிந்தித்தீர்களா ? குரல் தான் கொடுத்தீர்களா ? அரசு வழங்கும் இலவச பொருட்களா காவலர் அட்டைக்கு கிடையாது இது எந்த ஊர் நியாயம் தாலுகா ஆபீசில் வேலை செய்பவர்களுக்கு, அரசு பள்ளியில் வேலை செய்யும் டீச்சர் களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் சரி எந்த துறையில் வேலை செய்தாலும் சரி அவர்கள் எல்லாருக்கும் அரசின் எல்லா சலுகைகளும் கிடைக்கும் போது காவலர்களுக்கு மட்டும் கிடையாது அவர்கள் சம்பளம் என்ன லட்சகணக்கில் வாங்குகிறார்களா ? ஊரே உறங்கும்போது தன் குடும்பத்தை விட்டு பணி செய்கிறார்கள் வெள்ளத்தில் தன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் ஊர் பணி செய்யும் இவர்களை மட்டும் அரசும் அரசியல் வாதிகளும் ஒதுக்குவது ஏன் ? ஒரு வினாடி யோசித்தால் போதும் இவர்கள் குடும்பங்களும் வாழும் மனநிறைவோடு காவலர்களும் பணி செய்வார்கள் யோசிக்குமா ? யோசிப்பார்களா ? 22-Jan-2016 5:33 am
ச இரவிச்சந்திரன் - ச இரவிச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2016 7:05 am

கண்ணீர் துளிகள்

வயதோ பதினான்கு
வயதுக்கு மீறிய வளர்ச்சி
உடலில் மட்டுமல்ல எண்ணங்களிலும் தான்
வாழ்க்கை என்றால்
என்னவென்றே தெரியாத அந்த
வயதுக்கு வராத சிறுமிக்கு
வாழ்க்கை பிரச்சினை
வழக்காக வந்தது
வழக்காட வந்தாள்
வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள்
வாழ்க்கையை வழக்காக பார்க்கும்
வல்லமை படைத்த வல்லுனர்கள்
வாழ்வின் பெரும்பகுதியை
வழக்குகளோடு கழித்த
வயதான நீதிபதி
வந்தார் அமர்ந்தார் அவள்
வழக்கை கேட்க ஆயத்தமானார்
வார்த்தைகளா அவைகள் ?
வதைபட்டு சிதைவுற்று காயம்பட்ட
மனம் அள்ளி தெரித்த நெருப்பு கணைகள்
எனக்கு எட்டு வயதிற்குள்
எல்லா அசிங்கங்களும் தெரிந்து விட்டது
காதலோ பத

மேலும்

நண்பரின் அழகிய கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி தோழமையின் ஊக்குவிப்பால் எனது எழுத்துக்கள் சமூகம் மூடிய கயமைகளை நிச்சயம் சாடும் புதிய கலாசார சீரழிவில்லாத பெண்மையின் மேன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டும் புதிய படைப்புகளை வரவேற்பதும் எஞ்சிய மலிவான தமிழர் மரபுக்கு ஒவ்வாதவற்றை புறக்கணிப்பதும் செய்தால் போதும் தமிழும் தமிழர் கலாச்சாரமும் மென்மேலும் சிறப்பாக வாழும் தோழமைக்கு மீண்டும் நன்றி 21-Jan-2016 5:33 pm
உங்கள் கவிதை நிகழ்கால சினிமா மற்றும் நாடக உலகம் மீது வீசப்பட்ட நியாயமான கோபக் கற்கள் இன்றைய காலத்தில் காதல் என்பதையும் காமம் என்று விளம்பரப்படுத்தி சினிமா பலரின் வாழ்க்கையில் சீரழித்து விட்டது இன்னும் சீரழிக்க உள்ளது.காலத்தால் ஆளப்படும் இந்த பாவங்கள் எல்லாம் ஒரு நாள் முற்றுப்பெறும் என்று காலத்தை நகர்த்தினாலும் உலகத்திற்கு மரணம் எனும் நாள் குறைக்கப்படும் வரை அவை தொடர் கதைகளே!!படைப்புக்கள் ஒரு ஆழமான கருவை கதை போல் நகர்த்தி கவியாக படைத்த விதம் போற்றத்தக்கது எழுத்தார்களுக்கு சமூகப் பொறுப்பு உள்ளது என்பதும் நாம் அறிந்த விடயம் அதை மறந்து சிலர் செயற்பட்டாலும் பலர் அதை எதிர்த்த வண்ணமே எழுத்தின் இலக்கணத்தை பாதுகாத்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை 21-Jan-2016 7:15 am
மேலும்...
கருத்துகள்

மேலே