இந்திய கிரிகெட் அணியை தோற்கடித்த மாபெரும் வீரர்கள் இந்திய...
இந்திய கிரிகெட் அணியை தோற்கடித்த மாபெரும் வீரர்கள்
இந்திய கிரிகெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்க வில்லை இந்திய அணியின் பின்வரிசை வீரர்களே all rounder என்ற பெரிய பெயருடன் விளையாடும் வீரர்களும் மோசமான பந்து வீச்சை வெளிபடுத்திய பந்து வீச்சாளர்களுமே தோற்கடித்தனர் . ரவீந்திர ஜடேஜா எப்படிப்பட்ட ஆல் ரௌண்டெர் வெற்றி வாய்ப்பை மட்டை போட்டு மட்டை போட்டு வெற்றியாய் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தாரை வார்த்த மிக சிறந்த ஆல் ரௌண்டெர் வெற்றி தோல்வி சகஜம் தான் ஆனால் தொடர் முழுவதும் தோல்வி என்பது தான் ஏற்க்கமுடியாததாக உள்ளது மகேந்திர சிங் டோனி அணியின் தலைவர் என்ற முறையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற முறையில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து ஆட்டத்தின் போக்கை எதிரணி வீரர்களுக்கு சாதகமாக்கினார் என்றால் மிகை இல்லை . புதிய வீரர்களுக்கு வாய்ப்பு தரவேண்டியது தான் ஆனால் எங்கே என்ற விவஸ்தை இல்லாமல் முக்கியமான ஆட்டங்களிலா உள்ளே நுழைப்பது இதனால் இந்திய அணி ஈட்டி வைத்திருந்த நற்பெயர் தானே பலியானது இளம் வீரர்கள் மிக மோசமாக விளையாடி இந்திய அணியின் படு தோல்விக்கு காரணமாகினர்
நான்கு வீரர்கள் தலையில் தான் இந்திய அணியின் சுமை முழுவதும் இறக்கப்பட்டுள்ளது அவர்கள் ரோஹித் சர்மா , சிகார் தவான் . விராத் கோலி மற்றும் அஜின்க்யா ரஹானே இவர்கள் தவிர யாருமே இந்த தொடரில் சரியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை எஞ்சிய மோசமாக விளையாடும் வீரர்களை ஒரு தின சர்வதேச போட்டிகளில் இருந்து சிறிது காலம் நீக்கி இவர்களுக்கு இந்தியாவிற்குள் ஆடும் ஆட்டங்களான ரஞ்சி கோப்பை புச்சி பாபு போன்ற ஆட்டங்களில் இடம் பெற செய்து பயிற்சி அளித்து இவர்கள் திறனை பரிசோதனை செய்த பின் இவர்களுக்கு ஒரு தின சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு அளிக்கலாம் தேர்வு குழு அணி வீரர்களை தேர்வு செய்யும் போது மாவட்டங்களில் மாநிலங்களில் ர இருந்து இளம் வீரர்களை ஓபன் செலக்ஷன் மூலம் மாவட்ட மாநில அசொசியேஷன் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம் இந்திய அணி குறைந்த பட்சம் மூன்று அணிகளையாவது கை வசம் வைத்து கொண்டு களத்தில் இறங்க வேண்டும் தேசிய அணி குறைந்த பட்சம் மூன்று அணிகலாவது இருக்க வேண்டும் ஒரு அணி மிக மோசமாக விளையாடும் போது அடுத்த அணியை இறக்க தயங்கவே கூடாது இவர்கள் இந்திய அணி என்ற பெயரில் ஆடுவதால் தான் இந்த வேகமும் கோபமும் இந்த கோபமும் வேகமும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்றைய மோசமான ஆட்டத்தை பார்க்கும் போது ஏற்பட்ட ஒன்று இந்திய அணியின் வீரகளை தேர்வு செய்வதை இந்திய அரசு பொறுப்பேற்று கொள்ளவேண்டும் BCCI யின் செயல் பாடுகளை இந்திய அரசு கட்டு படுத்தவேண்டும் இந்திய விளையாட்டுத்துறையின் மேற்பார்வையில் செயல் படுத்த வேண்டும் பொறுப்பற்ற முறையில் விளையாடும் வீரர்களை பாரபட்சம் பார்க்காமல் அணியை நீக்க வேண்டும் அப்போதுதான் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க முடியும் இல்லையேல் இப்படியே ஒவ்வொரு தோல்விக்கும் அணி தலைவர் கூறும் சமாதானங்களை கேட்டு உச் தான் கொட்டமுடியும்