ச இரவிச்சந்திரன்- கருத்துகள்

தயார் அவர்கள் அரசியலுக்கு வர இதுவே தருணம்

தமிழின் மாண்பினை கலாச்சாரச் சிறப்பினை கண்டு சகிக்கமுடியாத அற்பமனம் படைத்த
சிறுமதியாளர்களின் கூட்டு சதியே இதனை போராட்டத்திற்கும் காரணம்

இல்லை இல்லவே இல்லை என்பது தான் என்னுடைய கருத்து மேலும் இந்த நிகழ்ச்சி அப்பட்டமான புனைவு என்பது காணும்போதே நமக்கு தெரியவரும் . இந்த நிகழ்ச்சி நமக்கு நாமே வகுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளை கேலிக்கூத்தாக்குகிறது . பாருங்கள் இந்த நிகழ்வுகளில் மனைவியின் கள்ளக்காதலை நியாயப்படுத்துவதும் கணவனின் ஒழுக்கக்கேடுகளுக்கு நியாயம் கற்பிப்பதும் தான் காட்டப்படுகிறது . இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்பதே என் கருத்து

அரசு பேருந்துகளின் அலட்சியம் ,
இன்று 08/01/2016 மாலை 4.30 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நான் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு போக்குவரத்து
பேருந்து தடம் எண் 157 பதிவு எண் TN 23N 2301 என்ற பேருந்து C V R தெரு வில் சிவாஸ் ஹோட்டல் எதிரில் நட்ட நடு சாலையில் நிறுத்தி பயணியை ஏற்றிக்கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு செய்ததுமின்றி பின்னல் வந்த எனது இருசக்கர வாகனத்தை நிலைகுலைய செய்தது
இதே தவறை இதே நேரத்தில் இதே இடத்தில் T 7 காஞ்சிபுரம் TO நெற்குன்றம் செல்லும் நகர பேருந்தும் செய்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருந்தது ஏராளமான சின்னஞ்சிறு மாணவர்களின்
உயிரோடும் அலட்சியமாக வ்ளையாடுகிறது
அரசு பேருந்துகள் என்றால் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம் எப்படி வேண்டு வேண்டுமானாலும் பயணிகளை ஏற்றிகொள்ளலாம் என்று ஏதேனும் சிறப்பு உரிமை வழங்கப்படிருக்கிறதா என தெரிய வில்லை தயவு செய்து தெளிவு படுத்தவும் இது பயணிகள் மற்றும் சாலையில் பயணிப்பவர்கள் உயிரோடு தொடர்புடைய விஷயம் என்பதால் தங்கள் மேலான கவனத்திற்கும் தக்க நடவடிக்கைக்கும் இதனை கொண்டு வருகிறேன்
தயவு செய்து நடவடிக்கை எடுத்ததன் விபரம் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்க தாழ்மையுடன் கோருகிறேன்
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ச ரவிச்சந்திரன் சமுக ஆர்வலர்

அரசும் அரசியல் வாதிகளும் காவல் துறையினரை ஒதுக்குவது ஏன்

ஊரில் பிரச்சினையா கூப்பிடு போலிசை ,
தெருவில் பிரச்சினையா கூப்பிடு போலிசை,
திருடன் வீட்டில் வந்துவிட்டானா கூப்பிடு போலிசை
அரசியல் மீட்டிங்கா கூப்பிடு போலிசை ,
மந்திரி வர்ராரா கூப்பிடு போலிசை ரோடு முழுதும் நிறுத்துவோம்
ஆனால் வெள்ள நிவாரணமா போலீஸ் குடும்பங்களுக்கு கிடையாது இப்படி ஒவ்வொரு தேவைக்கும் போலிசை கூப்பிடும் நாம் அரசின் சலுகைகள் வெல்ல நிவாரணம் என்று வரும்போது இவர்களை ஏன் ஒதுக்கினோம் ? யாரவது சிந்தித்தீர்களா ? குரல் தான் கொடுத்தீர்களா ?
அரசு வழங்கும் இலவச பொருட்களா காவலர் அட்டைக்கு கிடையாது இது எந்த ஊர் நியாயம்
தாலுகா ஆபீசில் வேலை செய்பவர்களுக்கு, அரசு பள்ளியில் வேலை செய்யும் டீச்சர் களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் சரி எந்த துறையில் வேலை செய்தாலும் சரி அவர்கள் எல்லாருக்கும் அரசின் எல்லா சலுகைகளும் கிடைக்கும் போது காவலர்களுக்கு மட்டும் கிடையாது
அவர்கள் சம்பளம் என்ன லட்சகணக்கில் வாங்குகிறார்களா ? ஊரே உறங்கும்போது தன் குடும்பத்தை விட்டு பணி செய்கிறார்கள் வெள்ளத்தில் தன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் ஊர் பணி செய்யும் இவர்களை மட்டும் அரசும் அரசியல் வாதிகளும் ஒதுக்குவது ஏன் ?
ஒரு வினாடி யோசித்தால் போதும் இவர்கள் குடும்பங்களும் வாழும் மனநிறைவோடு காவலர்களும் பணி செய்வார்கள் யோசிக்குமா ? யோசிப்பார்களா ?

நண்பரின் அழகிய கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி
தோழமையின் ஊக்குவிப்பால் எனது எழுத்துக்கள் சமூகம் மூடிய
கயமைகளை நிச்சயம் சாடும் புதிய கலாசார சீரழிவில்லாத பெண்மையின் மேன்மையை
உலகிற்கு எடுத்துக்காட்டும் புதிய படைப்புகளை வரவேற்பதும் எஞ்சிய மலிவான
தமிழர் மரபுக்கு ஒவ்வாதவற்றை புறக்கணிப்பதும் செய்தால் போதும் தமிழும் தமிழர் கலாச்சாரமும் மென்மேலும் சிறப்பாக வாழும்
தோழமைக்கு மீண்டும் நன்றி


ச இரவிச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே