தமிழ் ப்ரியா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் ப்ரியா
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  24-Sep-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2016
பார்த்தவர்கள்:  467
புள்ளி:  114

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்கிறேன், என் எல்லாமும் தமிழோடு பயணிப்பதால்.....
இன்பமோ துன்பமோ என் மொழியோடு உரையாடி துயரங்கள் மறக்கிறேன்.....
வாழ கற்றுக் கொடுத்தவள் தாய், நான் வாழும் நொடிகளுக்கு காரணம் என் தாய் மொழி...

என் படைப்புகள்
தமிழ் ப்ரியா செய்திகள்
தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2017 10:39 pm

புன்னகையே உன்னோடு :

கனவே உன்னோடு நிகழும் களவு
என் கற்பனைக் காவியங்கள்
நினைவே உன்னோடு நகரும் பொழுது
என் எண்ணங்களின் தேடல்கள்
பிறையே உன்னோடு பொழுதும் தொடரும்
என் இனிமைகளின் காலங்கள்
மழையே உன்னில் நனைந்திடும் நொடிகள்
கரைந்திடும் மனப் போராட்டங்கள்
வாழ்வே உன்னோடுக் கடந்திடும் காலம்
என் உறுதியின் ஊன்றுகோள்கள்
புன்னகையே உன்னோடு மலரும் இதழ்கள்
என் அன்பின் மகரந்தங்கள் ....

மேலும்

தமிழ் ப்ரியா - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2017 6:27 pm

வானை முட்டும் மலைகளாயினும் சரி
பாரெங்கும் படர்ந்த கடல்களாயினும் சரி
உனக்காக கடந்திடுவேன் நொடிப்பொழுதினில் அவற்றை!!

வானை அலங்கரிக்கும் நட்சத்திரங்களாயினும் சரி
கடலில் தோன்றிய முத்துக்களாயினும் சரி
நீ கேட்டால் சமர்பிப்பேன் உன் காலடியில் அவற்றை!!

முடிசூடா வீரனாயினும் சரி
முடிவைத் தரும் அசுரனாயினும் சரி
நீ சொன்னால் வென்றுகாட்டுவேன் எமனையும் நான்!!

மேலும்

ஆம் தோழி:) 08-Sep-2017 9:04 pm
மண் தாண்டும், விண் தாண்டும், விண்மீன்கள் தன்னை தாண்டும், கடல் தாண்டும், மலைத் தாண்டும், கடும் மலைத் தாண்டும் உள்ளம் கவர்ந்தோர் கடைக்கண் பார்வைக்கே... 08-Sep-2017 8:42 pm
நன்றி :) 05-Sep-2017 8:50 am
காதல் வெல்லாத ராஜ்ஜியம்இல்லை காதல் இல்லாமல் அது சாத்தியம் இல்லை ! அழகு . 05-Sep-2017 1:06 am
Mohanaselvam j அளித்த படைப்பில் (public) Vaasu Sena மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2017 2:40 pm

சன்னலோரம் நீ என் தோள் சாய்ந்து பயணம் 
மண் வாசமோடு உன் கூந்தல் வாசம் 
சாரலோடு சேர்ந்து கூந்தல் என் கண் இமையைத் தாக்கும் 
இரு கைகள் கோர்த்துக் குளிர் போக்கும் தருணம் 
தோள் சாய்ந்து போகும் இந்த தொலைதூர பயணம் 
தொடரும் வரை காதல் செய்வோம். 

அடை மழை முடிந்த மாலை நேரம் 
கடற்கரை மணலில் காதலை தேடி, 
அலையோடு கால் உரசி, கைகோர்த்து நடைப்பயணம் 
முழு நிலா வருகையை எதிர்பார்த்து 
காற்றின் வேகம் மீறி காதல் செய்வோம் . 

மிதமான வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் 
தோள் மீது கை வைத்து, சிறு பயணம் செல்வோம் 
சிதறும் சிரிப்பொலியை என் காதோடு கேட்டு 
சிறிது நேரம் நாம் காதல் செய்வோம். 

கோவத்தின் உச்சம் உன

மேலும்

Anaivarukum nandri 09-Sep-2017 1:51 pm
அருமை... 08-Sep-2017 8:38 pm
அருமை நட்பே........ . 04-Sep-2017 10:15 am
Arumai 03-Sep-2017 1:40 pm
யாழினி வளன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Sep-2017 2:28 pm

ஒரு ஊரில்
இரு குருவிகள்
இணைந்தே இருந்த
இரு குருவிகள்
இரு வேறு மரத்தில்
இடைவெளி எனும்
ஒரு விதியில்

இளைப்பாற ஒரு மடி
தேடியது அந்தக் குருவி
இனித்து கதை பேசிட
நினைத்தது இந்தக் குருவி

இன்புற தனது துணை
நாடியது அந்தக் குருவி
இருகை இணைத்து கிடந்திட
யாசித்தத்து இந்தக் குருவி

இடைவெளிகள் மறைந்து போகிட
விரும்பியது அந்தக் குருவி
இடம்பொருள் மறந்து போக
தொடங்கியது அந்தக் குருவி

இருப்புக்கொள்ளா மனசை அடக்கிப்
பார்த்தது அந்தக் குருவி
இறங்கிவரா ஆசையிடம் தோற்றுப்
போனது அந்தக் குருவி

தனிமையின் கூட்டுக்குள் அது
மணிக்கணக்காய் தவித்ததது
இனிமையின் காட்டுக்குள் அ

மேலும்

ஆஹா.. இரு இதயத்தின் காதல் கதையை இரு குருவிகளாக்கி பறக்க விடுகிறது கவிதை வானம். சிறகில்லாமல் நான் பார்க்கிறேன் அன்னை போல் காதலி என்னை கண்ணாக காப்பதால்., உன் புன்னகை மட்டும் எனக்கு பிடிக்கிறது என்னையும் உன் தாயாக்கி உன்னை குழந்தை போல் ரசிக்க வைப்பதால்.., உலகம் அழிந்த பின் சுவர்க்கத்திலும் நீயும் நானும் அற்புதமான காதல் பறவைகளாக இறைவனிடம் வரம் கேட்போம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 12:39 am
நன்றிங்க 11-Sep-2017 1:28 am
நன்றி 11-Sep-2017 1:28 am
மிக அழகு தோழி... 08-Sep-2017 8:32 pm
தமிழ் ப்ரியா - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2017 6:26 pm

என்ன இது. என்ன நடக்கிறது இந்த ஜனநாயக நாட்டில். ஜனநாயக நாடு ?? நாம் இன்னும் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. போராட்டம், கடையடைப்பு எல்லாவற்றிக்கும் தடை என்ற கோர்ட்டு உத்தரவு ஒரு சாட்டையடி நம் முதுகில்.

இவ்வளவு நாள் உறங்கி கொண்டோ அல்லது அமைதியாய் நடப்பன பார்த்துக் கொண்டிருந்த விழிகள் எல்லாம் இப்பொழுது தான் ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிர் தியாகத்தில் தூக்கம் கலைத்து மெல்ல விழிப்பு கொண்டிருக்க்கின்றன. ஊமையான அனிதாவின் உதடுகள் இதுவரை பேசாமல் கிடந்த பல உதடுகளுக்கு உண்மையை உரிமையை பேசச் சொல்லித் தந்த

மேலும்

பதிலில்லா கேள்விகளோடு நாம் .. 09-Sep-2017 12:47 am
சரியாக சொன்னீர்கள், இன்று தமிழகத்தில் என் போல் இருக்கும் ஒவ்வொரு உள்ளங்களின் குமுறல் தான் தங்கள் எழுத்துகளில் எண்ணங்களில் எதிரொலிக்கிறது. மயானம் அமைதி பூங்காதான், ஆனால் அதையும் இந்த அரசாங்கம் மின்சார எரிமேடையாக மாற்றி ஆறடி இடமும் நமக்கு சொந்தமில்லாமல் ஆக்கிவிட்டது. எல்லோரின் மனதில் ஒரு தீ எரிந்து கொண்டு தான் இருக்கிறது... இனி ஒரு விதி செய்வோம் தோழி..... 08-Sep-2017 8:04 pm
தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 6:33 am

மறவேனடா என் கண்ணா :

கார்மேகம் சூழ்ந்த வான ஆழிக்குள்
வின்மீன் முத்துக்களாய் உன் ஞாபகங்கள்

நினைத்து நினைத்தே பேரலையாய் விழிநீரும்
என் இமைதாண்டப் பாய்ந்து வரும்

வண்ணம் தோய்த்து வரைந்தெடுத்த வானவில்லாய்
கண்முன்னே உன் அழகு முகம்

கால் கடுத்து நடந்தப் பாதையெல்லாம்
என் வாழ்வில் திரிலோகமாய் போனதடா

நீ இசைத்த குழல் இசையோ
செவி தொடும் தென்றலென பேசிடுதே

மயில் இறகாய் உன் விழி வருடும்
ஒற்றைப் பார்வைக்காகக் காத்திருப்பேன் வழியோடு

நீலவண்ண மேனியனே மெய்விழியால் காணும்
கனா உன் நிழலுருவம் தன்னோடு

இவள் இதழ் மலர்ந்து பூத்திருக்க
உன் பூவிழியால் புன்னகைக்க காண்பாயோ

ஆடிக

மேலும்

நன்றி.... 07-Sep-2017 3:46 pm
கண்ணனை மறவாத மனம் வேண்டுமே ! கண்களின் ஒளியாக அவன் வேண்டுமே ! அருமை ! 07-Sep-2017 8:19 am
தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 6:28 am

உழவுக்கு உயிர் கொடுப்போம்

வற்றாத நதியென்றார்
அகண்ட காவிரி என்றார்

இக்கரைப் பச்சையென்றார்
அக்கரையோ தேடு என்றார்

முப்போகம் விளைந்த மண்ணில்
காவிரியே கடவுள் என்றார்

நஞ்சைக்கு பேர் கொடுத்தார்
புஞ்சைக்கும் நீர் கொடுத்தார்

தஞ்சைக்குப் பாத்தி இட்டார்
நெல்லுக்கு களஞ்சியம் இட்டார்

விதை நெல்லை சோதித்தார்
வினவினால் விஞ்ஞானம் என்றார்

ஊரார் சோற்றுக்கு உப்பிட்டார்
நம் சோற்றில் மண் இட்டார்

உழவனுக்கோ தூக்கிட்டார்
விவசாயம் வியாபாரம் என்றார்

வஞ்சனையில் மிதித்து விட்டீர்
நெஞ்சில் ஈரமும் இல்லையென உணர்த்திவிட்டீர்

சோற்றுக்கு மாய்ந்தக் கூட்டமில்லை
சோறிட்டே ம

மேலும்

தமிழ் ப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 6:21 am

நீயின்றி யாருடனும் பேச பிடிக்கவில்லை :

சொல் மறந்தேன்
என் செயல் மறந்தேன்
உன்னோடு கடந்த நாட்களை மட்டும்
எண்ணியே என் பொழுதுகளைக் கழிக்கிறேன்

பாடல் பிடிக்கவில்லை
அதன் வரிகளும் ருசிக்கவில்லை
உணவும் இறங்கவில்லை
மழையின் வாசமும் மணக்கவில்லை

நீயும் பிரியவில்லை
பிரிவேன் என்ற அறிகுறியும் தெரியவில்லை
ஆயினும் கடந்துவிட்டாய்
கானல் நீராய்

பேச்சில் விரக்தியை உணர்கிறேன்
என் இயலாமையைக் கொண்டு
என் உறவுகளை வெறுக்கச் செய்கிறேன்
உதறவும் செய்கிறேன்

மறக்க நினைக்கவில்லை
உன்னை நினையாமல் இருக்க முனைகிறேன்
முடியவில்லை என்னால்

காற்றில்
பார்வையில்
சுவாத்தில்
பிறர் பே

மேலும்

கடவுள் உலகை உருவாக்கி காதல் எனும் நூல் கொண்டு இயக்கிக் கொண்டிருக்கிறார்... நன்றிகள் பல.... 07-Sep-2017 3:51 pm
நன்றிகள் சகோ 07-Sep-2017 3:49 pm
எப்படி சொல்வேன் பிறரிடம் உனையன்றி என் உலகம் தனித்து சுழல்கிறது என்று. // அருமை சகோ 07-Sep-2017 1:48 pm
அவனின்றி ஓரணுவும் அசையாது அவன் கடவுளா ? காதலனா ? அருமை ! 07-Sep-2017 8:22 am
தமிழ் ப்ரியா - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2017 2:01 pm

உன்னிடம் உண்மை சொல்ல வேண்டுமடி...
உன்னைப் போல் என்னை நேசித்தவர் யாரும் இல்லையடி...
உன்னுள் நான். என்னுள் நீ..
எனக்கு தெரியும், நான் தனியாக இல்லையடி, உன் நினைவுகள் என்னோடிருப்பதால்...
உன் சிரிப்பில் என் சோகங்களெல்லாம் மறந்து மகிழ்கிறேனடி...
உன் நினைவுகளில் இருள் நீங்கி மனோபலம் பெறுகிறேனடி...
நீயே காரணமாய் இருக்கிறாயடி என் வாழ்வில் சாதிக்கவும், தொடர்ந்து உயிர் வாழவும், காயங்களெல்லாம் மறக்கவும்...

உன்னால் நான் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது பெரிய விடயமில்லையடி...
நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேனடி என்னால் உத்தமமாக வாழ முடியும் என்று...
நான் எப்போதும் உன்னை நேசிப்பேனடி.
இதுவே எனது ச

மேலும்

பேரலைகள் நிறைந்த கடலின் ஆழத்தையும்,மேகங்கள் குவிந்த நீல வானின் எல்லையையும் வரையறுக்க முடியாததை போல இலக்கிய உலகம் விந்தையானது.ஆயிரம் கவிதைகள், கட்டுரைகள் சிறுகதைகள் என வாசிப்பதன் மூலம் உள்ளங்கள் காதல் வயப்பட்டு இலக்கிய உலகின் கருவறையில் நாளும் எண்ணற்ற ஆர்வலர்கள் மண்ணில் பிறந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

எழுத்துக்கள் என்பது வெறும் பேனாவின் கிறுக்கல்களல்ல.அவைகள் உயிரோட்டமுள்ளவை.அதிலும் சில தெய்வீகம் நிறைந்ததாக காணப்படுகிறது.பல் வகைப்பட்ட கலாசாரங்கள் நிறைந்த சமுதாயத்தில் வேதங்கள் தான் மனிதனை நேர் வழிப்படுத்துகிறது.வேதங்களிலுள்ள வசனங்களை அடியார்கள் உணர்கையில் வாழ்க்கையும் சுத்தமாகிறது.அவனது எ

மேலும்

மனம் நிறைந்த நன்றிகள் 13-Jun-2017 4:09 am
மனதின் எண்ணங்கள் போல் மண்ணில் உதிர்ந்து கொண்டே இருக்கும் இலக்கியமும் இயற்றுவரும்... உண்மையின் வரிகள் அனைத்தும். வாழ்த்துக்கள் நண்பா... 01-Jun-2017 5:53 pm
மனம் நிறைந்த நன்றிகள் 27-Apr-2017 12:02 pm
உங்கள் புரிதலில் என் எண்ணமும் முற்றுகை பெறுகிறது நேரம் எடுத்து வாசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்... 27-Apr-2017 12:02 pm
தமிழ் ப்ரியா - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2017 10:18 am

மரக்கிளையில்
சில குயில்கள் கூவாமல்...
சன்னாலோரத்தில்
சிட்டுக் குருவிகள் வானில் பறக்காமல்....
அப்பால் தோட்டத்தில் பார்
மலராமல்
பூக்களும் காத்திருக்கின்றன
ப்ளீஸ்
துயில் கலைந்து ஒரு முறை
வந்து பாராய் தோழி !

----அன்புடன்,கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய தமிழ் ப்ரியா அன்புடன்,கவின் சாரலன் 22-Mar-2017 4:35 pm
எனது கற்பனையை வேறொரு கோணத்தில் பார்க்கிறீர்கள் . மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 22-Mar-2017 4:34 pm
அழகு கவி அருமை ஐயா.. நன்றி, தமிழ் ப்ரியா... 22-Mar-2017 11:43 am
அவளது உறக்கத்திலும் கனவெனும் மலர்கள் பூத்துக் கொண்டிருப்பதால் இடையில் விழி திறக்க மாட்டாள் அதுவும் காதலின் தியாகம் தானே! 22-Mar-2017 10:26 am
தமிழ் ப்ரியா - தமிழ் ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2017 12:08 am

சூரியனில் நனைந்தாலும் வெண்ணிலவு சுடுவதில்லை,
அலை வந்து அடித்தாலும் கரையோ சத்தமிடுவதில்லை,
சுழலாக வந்தாலும் காற்றோடு மரங்கள் கோபம் கொண்டதில்லை,
வெள்ளம் தொட்ட ஆற்றோடு கடல் ஊடல் கொண்டதில்லை,
பெண்ணே உன் கனலாய் தகக்கும் விழிகள் என்னைமட்டும் சுடுவதேன்.
இயற்கைக்கும் பெண்மை உண்டு ஆனால்
உன் பெண்மையில் இன்னும் மென்மை வராதது ஏனோ?..
முறைக்கும் விழிகளோடு நீ கடக்கும் போது
செதில் செதிலாய் என் இதயம் சிதறித்தான் போனது,
பிழையறியேன் பெண்ணே ஆயினும் என் காதலில் குறையும் இல்லையடி.
விடியும் வரை யோசித்திடு நாளை உன் எதிரில் நிற்பேன் காதல் காரனாய்,
ஏற்றுக்கொண்டால் சாகும் வரை உன் துணை நான் நிற்பேன் க

மேலும்

நேற்று பகிர்ந்த புதிய படைப்பு ஆண்களுக்கான காதல் வார்த்தைகள் என்று நினைக்கிறேன் 10-Jan-2017 11:05 am
ஆண்களை பற்றி காதல் வார்த்தை உண்டா சகோதரி... 09-Jan-2017 11:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

பத்மாவதி

பத்மாவதி

நெல்லை
Mohanaselvam j

Mohanaselvam j

வேலூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (34)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

ரவி

ரவி

Chennai
தனஜெயன்

தனஜெயன்

பாண்டிச்சேரி
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே