நானும் மழையாகிறேன்

வந்ததே வந்ததே
என் மேகக் கூட்டங்கள்
தந்ததே தந்ததே
மழைச் சாரல் ராகங்கள்
பாடும் பாடல்கள் எல்லாம்
மனம் சொல்லும் வார்த்தைகள்
துளிகள் எழுப்பும் சத்தம்
என் இதயத் தாளங்கள்
வந்ததே வந்ததே என் மேகக் கூட்டங்கள்

பனித்துளிகளை பருகும் முயலாகிறேன்
வசந்த வனங்களில் ஆடல் பயிலும் மயிலாகிறேன்
கூவும் குயிலின் குரலாகிறேன்
தண்ணீர் மேலே அலையாகிறேன்
பன்னீர் பூக்களின் வாசமாகிறேன்
சோழ தேசத்தின் சிலையாகிறேன்
தவழ்ந்து ஓடும் நதியாகிறேன்
கடலைக் கடக்கும் படகாகிறேன்
பறவை சிறகில் இறகாகிறேன்
நனைந்து நனைந்து எங்கும் கரைந்து
மழையாகிறேன் மழையாகிறேன்
நான் மழையாகிறேன்

வானில் உலவும் மேகம் போலே
பூக்கள் மலரும் தருணம் போலே
நிலவின் நிழலின் குளுமைப் போலே
பிறந்த குழவியின் அழுகைப் போலே
முதல் காதலின் முத்தம் போலே
மீசை பாரதி வரிகள் போலே
குமரி அழகு வெட்கம் போலே
கம்பன் பாட்டு நடையை போலே
சங்கம் வளர்த்த தமிழைப் போலே
ஆகிறேன் நான் ஆகிறேன்
போகிறேன் எங்கோ போகிறேன்
நனைந்து நனைந்து கரைந்து கரைந்து
மழையாகிறேன் நானும் மழையாகிறேன்...

தேடும் தேடலின் தேடல் நானே
பிறையின் மீதி நிலவும் நானே
அலைகள் தீண்டும் கரையும் நானே
கவிதை வரிகளில் வார்த்தை நானே
பெண்மை பேசும் நாணம் நானே
கொலுசு மணிகளின் ஓசை நானே
மண்ணில் விழுந்த துளிகள் போலே
இதயம் தன்னில் உதிரம் போலே
எங்கும் நிறைந்தே நானும் இருப்பேன்
கண்கள் காணும் தொலைவில் நிற்பேன்
தீண்டும் போது கரைந்திடும் பனித்துளிகள் போலே உறைந்து இருப்பேன்

வாழ்கிறேன் நான் வாழ்கிறேன்
மழை நீர்த்துளி தன்னில் வாழ்கிறேன்
போகிறேன் எங்கோ போகிறேன்
வின் தொடும் வரை போகிறேன்
ஆகிறேன் நான் ஆகிறேன்
மழையாகிறேன் மழையாகிறேன்
மழையாகவே மீண்டு வருகிறேன்...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (17-Jan-18, 6:22 pm)
பார்வை : 126

மேலே