தமிழ் ப்ரியா- கருத்துகள்

வஞ்ச புகழ்ச்சி போல அல்லவா இருக்கிறது. மிக அருமையான படைப்பு ஐயா... வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி சகோதரரே, கருத்தில் மகிழ்ந்தேன்...

எனது மனதில் தோன்றியதையே சகோதரர் ஆரோ அவர்களும் கேட்டு இருக்கிறீர்கள். முன்பு போல பதிவுகள் இட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலு‌ம் நம் படைப்பிற்கு மற்றவர்கள் தரும் கருத்துக்கள் கொண்டே பிழைகளையும் குறைகளையும் சரிசெய்ய முடியும். புதிய யோசனைகளும் யுக்திகளும் பிறக்கும். வெகு நாட்களாக தளத்தில் வருவதும் பிறர் கவிதைகள் படிப்பது வெளியேறி விடுவது, இதுவே என் வேலையாக இருந்தது. நான் ஒன்றும் கம்பனோ பாரதியோ அல்ல, ஆயினும் கவிதையின் தரம் படிக்கும் போது நமக்கும் புதிய கற்பனைகளை தூண்ட வேண்டும் என்பதே என் கருத்து.


மேலும் தங்களது மேலான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்...

தமிழ் ப்ரியா...

காதலுக்கு மரியாதை தந்ததால் தான் இருவரும் பிரிய வேண்டிய கட்டாயமானது, காதலன் திருமணம் ஆனவன். அதனபிறகும் இருவரும் ஒன்று சேர்வது நியாயம் என தோன்றவில்லை..

திருமணங்களில் சொந்தங்களுக்கு போதும் போதும் என்றளவுக்கு உபசரித்து, அவர்கள் வயிர் நிறைந்து மனதார வாழ்த்திவிட்டு போனதெல்லாம் மலையேறிவிட்டது...

அருமை அருமை, வெகு நாட்களுக்கு முன்பே எதிர்பார்த்த விளம்பரம் தான்...

நீதி தேவதையின் கண் காட்டிற்குள் இத்தனை சூட்சமங்களா ஐயா, பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பூலோகமே இருண்டு விட்டது என கனவு கண்டதாம். அப்படி இருக்கிறது இன்றைய அரசியலும் பெருந்தலைகளும்... மத்தியமும் மாநிலமும் கண்ணாமூச்சி ஆடுகிறது. இதில் யாருக்கு நல்ல முட்டை கிடைக்கும், யாருக்கு ஊள முட்டை கிடைக்கும் என்று கணக்குப் படுகிறார்கள்.. உண்மையில் ஊள முட்டையெல்லாம் மக்களாகிய நம் கையில் வந்து விழுகிறது... வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தண்டனை தேவையான ஒன்று தான் ஐயா...

வந்தவர்களை எல்லாம் வாழ வைக்கும் தமிழ்நாடு, ஏனோ நம் மக்களுக்கு நம் மீதே நம்பிக்கை அற்றுப் போய் விட்டது. நம் கண்ணீரை நம் விரல்களால் துடைக்க வேண்டும்.,நம் வேலையை செய்ய பிறர் கையை எதிர்பார்த்து இன்று நம் வளங்களை எல்லாம் எவனோ சுரண்டி கொண்டிருக்குறான். அதுவும் ஒற்றை முதலாளி எனும் சுயநல பேய்க்காக... நாட்டில் இன்னும் நிறைய நிகழ விருக்கிறது சகோதரரே, தமிழ்நாட்டில் இனி சிறிது சிறிதாக நிம்மதியும் அமைதியும் பறிபோகும்... அதில் எந்த மாற்றமும் இல்லை..

அம்மா என்ற ஒற்றை வார்த்தையே உலகின் மிக அழகான கவிதை....

மறப்பது மரணித்தாலும் முடியாத செயல் என்பதால் தான் நினைப்பதை நிறுத்தி கொள்ள சொல்கிறார்கள் போல...

உண்மைதான், கண்களின் நீரும் கூட வற்றி விடும் ஆனால் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை மட்டும் என்றுமே மாறுவதில்லை... என்ன செய்வது மண்ணின் உயிர் துளிகள் ஆயிற்றே...

எவரும் உணரா விந்தையாக, உளமறவா உருகுவோர் உயிராக, வாழ்வனைத்தும் யாம் பெற்ற பாவம் போக்கும் பேரொழியானவன் ஓம் நமசிவாய....

வலிகள் நிறைந்த இதயத்தில் தான் வார்த்தைகள் பிறப்பெடுக்கின்றன, அவை ஊற்றாகி பின் நதியாக சுழன்றோடி பிற இதயங்களில் இதமாய் வருடலாம், சில இதயங்களில் கரைகளையும் உடைத்து சேதமாக்கலாம்..

தனக்கென்று ஒரு பிரச்சனை வராத வரை இந்த மனிதன் அமைதியாக தான் இருக்கிறான், மனிதனாக மட்டுமல்ல கொஞ்சம் மனிதநேயமும் இருந்தால் பிறரின் துன்பமும் நம் இதயத்தை சற்று பட்டைத் தீட்டி பார்க்கும்.. மனிதன் மட்டுமில்லை இந்த உலகமும் எங்கே செல்கிறது எனக் கேளுங்கள்.. கேளிக்கைகள், மதுபோதை என அநாவசியமாக எதெற்கெல்லாமோ நேரத்தை விரயமாக்கிக் கொண்டு இருக்கிறோம்.. பிறர் துன்பம் கண்டு நம் கண்களில் வழியும் ஒரு துளி கண்ணீர் கூட துயரத்தில் இருக்கும் பலரை உளமாற தேற்றும்...

உண்மையில் காதல் காலங்களை எண்ணி கவலைப்படுவதில்லை, அது மறு ஆயுளையும் சேர்த்து வாழ்ந்து கொண்டே இருக்கும். காத்திருப்பில் கரைவதைத் தவிர வேறு வழியில்லை இங்கு.

தங்களின் கருத்திலும் வாழ்த்துகளிலும் மனம் மகிழ்ந்தேன் சகோதரரே...


தமிழ் ப்ரியா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே