பையன்களைச் சாமியாராக்கப் போறேன்
செய்தித்தாள் விளம்பரம்
@@@@@@@@@#######
இதனால் அனைவருக்கும்
தெரியப்படுத்துவது என்னவெனில்
பெண் குழந்தைகளின் பிறப்பு
விகிதம் குறைந்து வருகிறது.
இன்னும் இருபது ஆண்டுகள்
கழித்து 10% பையன்கள் பெண்
கிடைக்காமல் திருமண
வாழ்க்கையை நடத்த முடியாது.
பெண்களின் எண்ணிக்கை
குறைவதால் இளைஞர்கள்
வரதட்சணைக் கொடுமைக்கு
ஆளாக நேரிடும். எட்டு வயதிற்குள்
எனக்கு நான்கு மகன்கள்
உள்ளார்கள். அவர்கள்
எதிர்காலத்தை நினைத்தால்
கவலைப்படமால் இருக்க
முடியவில்லை.
எனவே என் மகன்களின் பேரின்ப
வாழ்க்கைக்காக எங்கள் சொத்தை
விற்று அதில் கிடைக்கும் பணத்தை
ஏதாவது ஆனந்தா ஆசிரமத்தில்
செலுத்தி குடும்பத்துடன் நாங்கள்
ஆனந்தா ஆசிரமவாசிகள்
ஆகப்போகிறோம்.
இதில் யாருக்காவது
ஆட்சேபணை இருந்தால் வருகிற 5
ஆம் தேதிக்குள் ஒரு வழக்குரைஞர்
மூலம் எனக்குத் தெரியப்படுத்த
வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ஏழுமலை முருகன்
35/4, விரக்தியான் பேட்டை
சென்னை - 000 000.
நாள்: 14-02-2019.