ஓர் கடிதம்

கையில் ஒரு நடுக்கம்
முகத்திலிருந்து சிந்துகின்றன
வேர்வை துளிகள்
கொடுத்துவிடலாம் என
மனம் கூறுகிறது
கொடுத்தால் என்னவாகும்
என மூளை கூறுகிறது

ஆள் நடமாட்டம் இல்லை
-----------------------------
அந்த வேளையில் ஒரு பதற்றம்
கிட்டே நெருங்க நெருங்க
அடுத்து என்னவாகுமோ
என்ற பகல் கனவு
ஊர்ந்து சென்றே
திடீரென முன் நீட்டினேன்

என் பள்ளியில் கொடுத்த
ரேங்க் கார்டை…….
அப்பாவின் அருகினிலே
-ச.மணிகண்டன்

எழுதியவர் : ச.manikandan (12-Feb-19, 4:31 pm)
சேர்த்தது : manikandan
பார்வை : 48

சிறந்த நகைச்சுவைகள்

மேலே