நகைச்சுவை உரையாடல்

திருமணத்தில் இருவர் பேசிய நகைச்சுவை

சரண் .....என்ன மச்சான் சாப்பாடு இன்னும் ,,,,,,
பரத் ....வருது வருது ,

சரண் .... ஆகயாக் கப்பலிலா /
பரத் ...ஏன் பறக்கிற/ கொஞ்சம் சும்மாஇரு .

சரண் ......என்னமோ ஸெல்ப் சேவிஸ் என்கிறாங்க ஒண்ணுமே புரியலையே
பரத் ...... அட வாப்பா நீயும் நானும் அந்த வரிசையில் நிற்கணும் ,

சரண் ...என்ன இம்சையாய் இருக்கு .
பரத் ....இதுதான் மேட்டர் நிறைய அயிட்டங்கள் வரிசையாய் இருக்கு நமக்கு எது வேணுமோ எடுத்துக்கலாம்,

சரண் .... இவ்வளவு நேரமும் தெரியாமல் போச்சு தெரிந்திருந்தால் முன் வரிசையில் நின்றிருக்கலாம்,
பரத் .... இப்ப ஒண்ணும் கெட்டப் போகல, தட்டை தூக்கி கொண்டு வா,

சரண் .... ஏன் மச்சான் பிச்சை எடுக்கவா/ சிரிப்பு ,,,, இருவரும் வாய்விட்டு சிரித்தனர் .
பரத் ....ஒரு நல்ல இடத்துக் கல்யாணத்துக்கு உன்ன கூட்டி வந்தன் பாரு என்னை செருப்பால அடித்திக்கணும்,

சரண் ....டேய் மச்சான் என்னுடைய புது செருப்படா இதைத் தரவா/
பரத் ...... உன்னோட கதையால் பசியே போயிற்றுது மச்சான் .

சரண் .....எனக்கு இப்பதான் கூடப் பசிக்குதடா ,
பரத்...... பொண்ணு மாப்பிள்ளையை அம்போ என்று விட்டுவிட்டு எல்லோரும் சாப்பாட்டுக்கு வந்திற்றாங்க பாரு.

சரண் .....டேய் அவர்களுக்கு பசிக்காதடா மச்சான் சந்தோஷத்தில ,
பரத் ...... அப்படி சொல்லாத மச்சான், மாப்பிள்ளை முகத்தை பாரு வைத்த கண் வாங்காம சாப்பாட்டு மேசையையும் வரிசையில் நிற்கும் சனங்களையும் மாறி மாறி பார்துக்கொண்டிருக்கிறார் .

சரண் .....அவர் பாவம்தான் இந்த போட்டோ எடுக்கிற ஆளிடம் மாட்டிகிட்டு தவியாய் தவிக்கிறார்.
பரத் .....பெரிய இடத்துக் கலியாணம் என்றால் இப்படித்தான்,

சரண் ..... நாம கதையோட கதையாக சாப்பாடு மேசைக்கு வந்திட்டம் பாரு,
பரத் .... இனி உன் விருப்பம் போல் சாப்பாடு எடுத்துக்கோ,

சரண் .....வேண்டியது வேண்டாதது எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தட்டு சரணின் தட்டு

நிரம்பி விட்டது.

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Feb-19, 11:25 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 1602

சிறந்த நகைச்சுவைகள்

மேலே